தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே மழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஓரிரு தினங்களாக மாநிலம் முழுவதும் மழையின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்ட்டது. மேலும், பல மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.


இந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது. தற்போது வரை பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதாலும், இன்று முழுவதும் பரவலாக மழை வாய்ப்பு இருப்பதாகவும் ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக, தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.




கடலூரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அந்த மாவட்டத்திற்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.


காஞ்சிபுரத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், காஞ்சிபுரத்தில் உள்ள உத்திரமேரூர் மற்றும் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஏ.ஆர்.ராகுல்நாத் அறிவித்துள்ளார்.


அதேபோல, திண்டுக்கல் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருவதால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தின் தலைநகரான சென்னையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னையிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.




மேற்கண்ட மாவட்டங்கள் மட்டுமின்றி கனமழை காரணமாக விழுப்புரம், அரியலூர்,பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் நேற்றுதான் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில், சில மாவட்டங்களில் இன்னும் பள்ளிகளை திறக்க முடியாத அளவிற்கு மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


சென்னையில் நேற்று முதல் மழை அவ்வப்போது விட்டுவிட்டு பெய்து வந்தது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் மழையின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. இதன்காரணமாக, நுங்கம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், மயிலாப்பூர், தி.நகர், ராயபுரம், ராயபேட்டை, பாரிமுனை, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் கடுமையாக தேங்கியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண