வாழ்க்கை முறையில் என்றும் ஓய்வு பெறாத ஆண்களுக்காக  எல்ஐசி நிறுவனம் ஆதார் ஸ்டாம்ப் பாலிசியை செயல்படுத்தி வருகிறது. 


பணத்தைக் கையாள தெரியாத, கையாள விருப்பமில்லாத ஆண்கள் இந்த காப்பீட்டில் முதலீடு செய்து லாபம் அடையலாம்.   


இந்தத் திட்டத்திற்கும், பங்குச் சந்தைக்கும் எந்தத் தொடர்பும் இல்லாததால், பங்குச் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் உங்கள் முதலீட்டின் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. உங்கள் நிதி பாதுகாப்பாக இருக்கும். உங்கள் குழந்தைகளின் திருமணச் செலவு, கல்விக் கட்டணம், சொந்த வீடு வாங்கும் கனவு முதலானவற்றை நிறைவேற்ற இந்தத் திட்டத்தின் முதலீடு செய்யலாம். இதில் ஆயுள் காப்பீடும் இருப்பதால், மேலும் நன்மைகள் கிடைக்கின்றன. 


குறைந்தபட்ச காப்புத் தொகை : ரூ. 75 ஆயிரம் 


அதிகபட்ச காப்புத் தொகை: ரூ. 3 லட்சம்   


தகுதி: ஆதார் கணக்கைக் கொண்டுள்ள 8 வயது முதல் 55 வயது உள்ள ஆண்கள் இதில் பங்கேற்கலாம்.


அதிகபட்ச முதிர்வு வயது: 70 ஆண்டுகள் 


பாலிசி பலன்கள்: 


முதிர்வு பயன்: பாலிசி முதிரும் போது காப்பீட்டுத் தொகையினை பெறலாம்.  


திட்டம் எவ்வாறு செயல்படுகிறது:


உதாரணமாக, 30 வயது கொண்ட அருண் எல்ஐசியின் ஆதார் ஸ்டாம்ப் பாலிசியை தேர்வு செய்கிறார் என்று எடுத்துக் கொள்வோம். பிரீமியம் செலுத்தும் காலம் 20 ஆண்டுகள் மற்றும் காப்பீட்டுத் தொகை 1 லட்சம் ரூபாயை தேர்வு செய்தால் அவர் ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய மொத்த பிரியத்தின் தொகை 3,646 ஆகும். 




             


இறப்பு பயன் : பாலிசி காலம் முழுவதற்கும்  ஆயுள் காப்பீட்டை பெறலாம். 


காப்பீட்டாளர் (அருண்) பாலிசியின் 5 ஆண்டுகளுக்கு மேல் மரணன் அடைந்தால் காப்புத்தொகை (காப்புத் தொகையாக பாலிசியில் குறிப்பிடப்படும் அடிப்படை காப்புத்தொகை (அல்லது) செலுத்தும் வருடாந்திர பிரீமியத்தின் 7 மடங்கு (அல்லது) பாலிசி காலத்தில் செலுத்தும் மொத்த பிரியத்தின் 105% மடங்கு. இவற்றில் எது அதிகமோ அத்தொகை வழங்கப்படும். மேலும், கூடுதலாக போனஸ் தொகையும் வழங்கப்படும்.   


காப்பீட்டாளர் பாலிசியின் 5 ஆண்டுகளுக்குள் மரணம் அடைந்தால்,  காப்புத்தொகை (காப்புத் தொகையாக பாலிசியில் குறிப்பிடப்படும் அடிப்படை காப்புத்தொகை (அல்லது) செலுத்தும் வருடாந்திர பிரீமியத்தின் 7 மடங்கு (அல்லது) பாலிசி காலத்தில் செலுத்தும் மொத்த பிரியத்தின் 105% மடங்கு. இவற்றில் எது அதிகமோ அத்தொகை வழங்கப்படும்.  


திட்டத்தின் சிறப்பம்சங்கள்: 



  • கல்வி மற்றும் திருமண காலத்திற்கு உபயோகமானது

  • குறைவான காலத்திற்கு பணம் செலுத்தி நீண்ட கால காப்பீடுப் பயன் மற்றும் அதிக பலன்கள் பெறும் வாய்ப்பு

  • 80cன் கீழ் வரி விலக்கு (ரூ. 1.50 லட்சம் வரை) முதிர்வு தொகைக்கு வரி விலக்கு உண்டு.

  • விபத்து மற்றும் உடல் செயலிழப்பிற்கு ரூ. 1 கோடி வரை காப்புத் தொகை பெற்றுக் கொள்ளும் வசதி.

  • கூடுதல் காப்பீடு ரைடர் பெறும் வசதி

  • பாலிசி கடன் மற்றும் சரண்டர் வசதி உண்டு



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண