தஞ்சை மாவட்டத்தில் மின் மோட்டார் மற்றும் ஆறு வாய்க்கால் தண்ணீரை கொண்டு கடந்த மாதம் விதைதெளித்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு நாற்றுகளை பறித்து வயலில் நடவு செய்து வருகின்றனர். குறுவை நடவுப்பணி தற்போது  நடைபெற்று வரும் நிலையில், பயிர்கள் அனைத்தும் சில நாட்களில் சூல் பருவம் எனும் பால் பருவத்திற்கு வரும் நிலையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா-தாளடி நெற்பயிர்களில் எலிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பால் பருவத்திலுள்ள நெற்கதிர்களில் நெல் மணிகள் வருவதற்கு முன்பு இளம் நாற்றுக்கள், இனிப்பாகவும், எலிகள் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் சுலபமாக இருக்கும், ருசியுடன் இருப்பதால், நாற்றுக்களை எலிகள் கடித்து வெட்டி துண்டாக்கி விடுகிறது. இதனால், குறுவை சாகுபடி விளைச்சல் கேள்வி குறியாகியுள்ளது.




இதனால் வேதனையடைந்த விவசாயிகள், நெற்பயிர்களை நாசம் செய்யும் வரப்பிலுள்ள எலிகளை பிடிக்க முடிவு செய்தனர். அதன் படி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், பட்டீஸ்வரம், தேனாம்படுகை, சுவாமிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள், நெற்பயிரை தாக்கும் எலிகளை பிடிப்பதற்காக, உள்ளவர்கள் அழைத்து வந்து எலிகளை பிடிக்க வைத்தனர். ஆனால் எலி பிடிப்பவர்கள், கிட்டி வைக்காமல், வலைகளை வைத்து எலிகளை பிடித்து விற்பனை செய்கின்றனர். வரப்பில் பிடித்த எலிகளை, கோரை புல்லில், கால்களை இரண்டாக கீழித்து மாட்டி விடுகின்றனர். அந்த எலிகள் உயிருடன் அங்கும் இங்கும், கோரை புல்லிலேயே  செல்வதால், பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.  ஒரு கோரையில் மாட்டியுள்ள 6 எலிகள்,  ரூ. 250 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. வயலிலுள்ள எலிகள் நெற்பயிரை சாப்பிடுவதால், வரப்பு எலிகள் மிகவும் சுருசியாக இருக்கும். மேலும், கை,கால்கள் வலி, இடுப்பு, முதுகு வலிகளுக்கு மருந்தாக பயன்படுவதால், பெரும்பாலான விவசாயிகள் வரப்பு எலிகளை வாங்கி செல்கின்றனர்.


இது குறித்து எலி விற்பனை செய்பவர் கூறுகையில், வயல்களில் உள்ள நெற்பயிரை நாசம் செய்யும் எலிகளை கிட்டி வைத்து பிடித்தால், இறந்த விடும். மறுநாள் வந்து எலிகளை எடுத்தால், பல்வேறு பறவைகள், எறும்புகள், விஷஜந்துக்கள் தின்று விடும். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசும்.  இதனையறிந்து எலியை வலையை வைத்து  உயிருடன் பிடித்து விற்பனை செய்கின்றோம்.


வயல்களில் உள்ள எலிகளை பிடிப்பதற்காக, எங்களை போன்ற எலிகளை பிடிப்பவர்களை அழைத்து வந்து வலைகளை வைக்கின்றோம். ஒரு எலியை பிடித்தால், 30 என வயல் உரிமையாளர்கள் கொடுத்து விடுவார்கள். அந்த எலிகளை உயிருடன் இருப்பதால், நல்ல விலைக்கு விற்பனை செய்து விடுவோம். ஆடு, கோழி இறைச்சியை விட, நெல் வயல்களில் உள்ள வரப்பு எலிகள் உயிருடன் இருந்தால், நல்ல விலைக்கு செல்லும். பல்வேறு உடல் வலிகளை போக்குவதால், பெரும்பாலான விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். 6 எண்ணிக்கையிலுள்ள எலிகள், சுமார் அரை  கிலோ வரை எடை இருக்கும். எலிகளின் எண்ணிக்கை, எடையை பொறுத்து, 250 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்கின்றோம்.  பிடிக்கும் போது வலைகளில் எலிகள் இறந்து விட்டால், கரையில் போட்டு விட்டுவிடவோம். அதனை பறவைகள் தின்று விடும்.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றில் வெள்ளம் வந்த போது, வயல், வரப்புகளில் அதிகமான தண்ணீர் நிரம்பி ஒடியது. அதனால் வரப்புகளிலுள்ள எலிகள் அனைத்து இறந்தன. அந்த வருடம் எலி தொல்லை இல்லாமல், சாகுபடி நன்றாக இருந்தது.  தற்போது நெற்பயிர்களில் உள்ள வரப்புகளில் எலிகளின் பெருக்கம் அதிகமாகிவிட்டது என்றார்.