தஞ்சாவூர்: வடக்கிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் நம் குடும்பத்தை நாம் காப்பாற்ற இயலும். உங்களுடன் நாங்கள் எப்போதும் உறுதுணையாக நிற்போம். அதேபோல் மக்களும் தங்களின் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்காதவாறு கவனமாக இருக்க வேண்டும் என்று தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

மழைக்காலத்தில் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காd விழிப்புணர்வு அவசியம். மழைக்காலத்தில் பரவும் நோய்கள், குறிப்பாக காய்ச்சல், டெங்கு மற்றும் மலேரியா போன்றவற்றைத் தடுக்க சுகாதாரமான பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். இடி, மின்னல் போன்ற இயற்கை அபாயங்களிலிருந்து தப்பிக்க விழிப்புணர்வுடன் இருப்பது, சாலைகளில் எச்சரிக்கையாக செல்வது மற்றும் பாதுகாப்பான நீர்ப் பயன்பாட்டை உறுதி செய்வது என்பது மிகவும் அவசிய அத்தியாவசியமான ஒன்றாகும்.. சுகாதாரமான மற்றும் நன்கு சமைத்த உணவுகளை உண்ணுங்கள். ஈரமான அல்லது சமைக்கப்படாத உணவுகளைத் தவிர்க்கவும். குடிப்பதற்கு மற்றும் சமைப்பதற்கு சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்துங்கள். தண்ணீரை காய்ச்சி அல்லது வடிகட்டி குடிப்பது நல்லது. உங்கள் கைகளை அடிக்கடி கழுவவும். சளி, இருமல் போன்ற நோய்த்தொற்றுகள் பரவாமல் இருக்க இது உதவுகிறது.

கொசுக்கள் பெருகாமல் தடுக்க தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்துங்கள். உங்கள் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். தேங்காய் மட்டை, உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், வண்டி டயர்கள், காலி டப்பாக்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்கி இருக்காமல் பார்ததுக் கொள்ளவும், மேலும் இதுபோன்ற பொருட்களை அகற்றி விட வேண்டும். 

Continues below advertisement

மழைக்காலத்தில் சாலைகள் வழுக்கலாக இருக்கும். எனவே, வாகனங்களை மெதுவாகவும் கவனமாகவும் ஓட்டவும். வேகத்தைக் குறைத்து, வாகனங்களுக்கு இடையே போதுமான இடைவெளி விட்டு செல்லவும். நம் குடும்பத்தின் பாதுகாப்பு நம்மிடம்தான் உள்ளது. மழை பெய்யும் நேரத்தில் செல்லும் போது மரங்களின் கீழ் ஒதுங்கி நிற்க வேண்டாம். மழை பெய்கிறது என்று மிகவும் வேகமாக வாகனத்தில் பயணிப்பதை முற்றிலுமாக தவிர்க்கவும்.

மழை அல்லது பனிமூட்டம் காரணமாக பார்வை குறைவாக இருக்கும் போது வாகனத்தின் விளக்குகளைப் பயன்படுத்தவும். இடி, மின்னலின் போது திறந்தவெளிகளில் நிற்பதை தவிர்க்கவும். மரங்கள் அல்லது மின் கம்பங்களுக்கு அருகில் நிற்பதை தவிர்க்கவும்.

ஈரமான காலணிகள் குழந்தைகளை அசௌகரியப்படுத்துவது மட்டுமல்லாமல், பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் மாறும். பிடியை வழங்கும் மற்றும் கால்களை உலர வைக்கும் நீர்ப்புகா செருப்புகளை குழந்தைகளுக்கு அணிவிக்க அறிவுறுத்துங்கள். 

மழைக்காலத்தையொட்டி டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வணிக நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் வீடுகளில் கொசு புழு உற்பத்தி ஆகாத வகையில் தேங்கும் தண்ணீரை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன. டெங்கு கொசுக்களின் வளர்ச்சியைத் தடுப்போம், நீர் தேங்குவதைத் தவிர்ப்போம், வீடு மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வோம். கொசுக்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்து கொள்வோம்.டெங்கு கொசுக்கள் தேங்கிய நீரில் முட்டையிடுவதால், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீடு மற்றும் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருப்பது டெங்கு கொசுக்கள் வளராமல் தடுக்க உதவும். தண்ணீர் தொட்டிகள், வாளிகள் போன்றவற்றை மூடி வைப்பதன் மூலம் கொசுக்கள் உள்ளே சென்று முட்டையிடுவதைத் தடுக்கலாம். இதில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சளி, காய்ச்சல் இருந்தால் தனக்குதானே மருத்துவம் பார்த்துக் கொள்வதை தவிர்த்து மருத்துவரை அணுகவும். டெங்குவின் அறிகுறிகளான காய்ச்சல், தலைவலி, தசை வலி போன்றவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். நம்மைக் காப்போம். நம்மை சுற்றி உள்ளவர்களையும் பாதுகாப்போம். தஞ்சாவூர் மாநகராட்சி மக்களின் சேவைக்காக தீவிரமாக இயங்குகிறது. எனவே உங்களுடன் நாங்கள்... எப்போதும் இருப்போம். நீங்களும் கவனமுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.