இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியவாறு கடந்த 1.11.2021 அன்று தஞ்சாவூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலின் நகல், பொது மக்களின் பார்வைக்காக வருகின்ற 30.11.2021 அன்று வரை அனைத்து வாக்குசாவடிகள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கு முறை திருத்தம் 2022 தொடர்பான பணிகள் கடந்த 1.11.2021 அன்று முதல் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 13.11.2021, 14.11.2021, 27.11.2021, 28.11.2021 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றது.
இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலம் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் போதிய அளவிலான விண்ணப்ப படிவங்களுடன் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பணியில் இருப்பார்கள். தஞ்சாவூர் மாவட்ட பொது மக்கள் இவ்வாய்ப்பினை பயன்படத்தி, சிறப்பு முகாம் நாட்களில் நடைபெறும் முகாமில் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர், பிழையின்றி இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். மேலும், வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்த்திட, படிவம் எண் 6 ஆம், இறந்த மற்றும் இடம் பெயந்த நபர்களின் பெயரை நீக்கம் செய்ய படிவம் எண் 7 ஆம், வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பிழைகளை திருத்தம் செய், வாக்காளர்களின் வண்ணப்புகைப்படம் இடம்பெறச்செய்ய படிவம் எண் 8 ஆம், ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் எண் 8 ஏ பெற்று பூர்த்தி செய்து அந்தந்த வாக்குசாவடியில் வழங்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகின்ற 30.11.2021 அன்று வரை படிவங்கள் வாங்கப்படும். வாக்குசாவடி சென்று படிவம் பெற்று பூர்த்தி செய்து வழங்க முடியாதவர்கள், www.nvsp.in என்ற இணைய தளம் மூலமாகவும், voters help line என்ற mobile app மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம். தொலைந்து மற்றும் காணாமல் போன வாக்காளர் அட்டைக்கு மாற்று அட்டையினை அரசு இ-சேவை மையங்களில் கட்டமின்றி பெற்றுக்கொள்ளலாம். இந்த வாய்ப்பினை அனைத்து பொதுமக்களும் பயன் பெற வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலீவர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை: நீதிமன்ற உத்தரவை மீறி வெண்ணாற்றில் கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் அவதி