மயிலாடுதுறை : அம்பேத்கர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்த எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்.. கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்..

மயிலாடுதுறை அருகே அம்பேத்கர் பிறந்த நாளில் அவரது உருவப்படத்தை விடுதலை சிறுத்தை கட்சியினர் வைத்து மரியாதை செலுத்த எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த பட்டவர்த்தி பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது தொடர்பாக இரு வேறு சமுகத்தினர்  இடையே மோதல் ஏற்பட்டது. 

Continues below advertisement

அதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செய்த போது மோதல் ஏற்பட்டது. அதில் இரண்டு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக இரண்டு தரப்பினர் மீதும் மணல்மேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.


Harnaaz Sandhu: குண்டாகிட்டேன்.. எனக்கு இப்படி ஒரு நோய்.. மிஸ் யுனிவர்ஸ் ஹர்னாஸ் சொன்ன தகவல்!

இந்நிலையில், வருகின்ற ஏப்ரல் 14-ஆம் தேதி சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாளன்று அவரது திருவுருவப் படம் வைத்து அஞ்சலி செலுத்த காவல்துறையினரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனுமதி கோரியிருந்தனர். காவல் நிலையத்தில் இதற்கு அனுமதி மறுத்த நிலையில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் தலைமையில் இப்பிரச்சனை தொடர்பாக இருதரப்பினர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அதன் பிறகு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் முன்னிலையில் முடிவெடுக்கப்பட்டது.  இதைடுத்து நேற்று கோட்டாட்சியர் தலைமையில் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள இருந்தனர். இதற்கு பட்டவர்த்தி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலதரப்பு மக்கள் வசிக்கும் தங்கள் பகுதியில் அம்பேத்கர் பிறந்த தினத்தில் கோவில் திருவிழா நடைபெறவுள்ளதால், நிகழ்சியில் பலதரப்பட்ட மக்கள் கலந்து கொள்ளவுள்ளதால் தேவையற்ற கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கர் படம் வைத்து நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கக்கூடாது என்று கூறி கருப்புக்கொடி ஏந்தி ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வலி நிவாரணி மாத்திரை டூ போதை ஊசி.. இளைஞர்களுக்கு சப்ளை.. அதிர வைக்கும் சம்பவம்! 3 பேர் கைது

ஆர்ப்பாட்டத்தில் ஜாதி கலவரத்தை துண்டும் நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் பட்டவர்த்தி பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியினர் மற்றும் மற்ற சாதியினர் அம்பேத்கர் படம் வைத்தால் கண்டிப்பாக கலவரம் ஏற்படும். எனவே  பிரச்சனை ஏற்படாத வகையில் அரசே அம்பேத்கர் படத்தை வைக்க வேண்டும் என்று வலியுத்தியுள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola