மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி கிராமத்தில் மதகடி பேருந்து நிறுத்தத்தில் டிசம்பர் 6 ம் தேதி அம்பேத்கரின் 65 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்பேத்கரின் திருவுருவப் படத்தை வைத்து அஞ்சலி செலுத்துவதற்கான நிகழ்ச்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்திருந்தனர்.  இதற்கு அப்பகுதியை சேர்ந்த ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 




இதனால் ஜாதி மோதல் ஏற்பட வழிவகுக்கும் என்று கூறியதால் பட்டவர்த்தி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு சமூகத்தினருக்கும்,  விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும்  இடையே மோதல் ஏற்பட்டது.  




Jio Cheapest Prepaid Plan: ஒரு ரூபாய்க்கு இண்டர்நெட் ரீசார்ஜ்! புதிய அதிரடி ப்ளானை அறிமுகம் செய்த ஜியோ!


மோதலை தொடர்ந்து இரண்டு தரப்பினரும் கற்களை வீசி  தாக்கிக் கொண்டனர். உடனடியாக கலவரம் ஏற்படாதவாறு போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடையும், மற்ற கடைகளும் அடைக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஐந்து பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக இரு சமூகத்தினரும் மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் மணல்மேடு காவல்துறையினர் இருதரப்பிலும் 8 பேரை கைது செய்து மேலும் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.




சரும நோய்களை போக்கும் சித்த மருத்துவம்.. ஒரு பார்வை


இந்நிலையில் அம்பேத்கர் திருவுருவப் படம் வைத்து அஞ்சலி செலுத்த எதிர்ப்பு தெரிவித்து மோதலில் ஈடுபட்டவர்களை கண்டித்தும், எதிர்ப்பு தெரிவித்த அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், கலவரத்தை தடுக்காத காவல்துறை, வருவாய் துறையினரை கண்டித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர்  அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். 




Watch Video | இப்படி ஒரு மீனா? ஆய்வாளர்கள் கண்டுபிடித்த கண்ணாடி மீன்!


இந்த ஆர்ப்பாட்டத்தால் கச்சேரி சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.  ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக நாட்டுப்புற கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம் தஞ்சாவூர் ஆகிய மூன்று மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.