நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின்பேரில் குற்றச்சம்பவங்களை தடுப்பதற்கு காவல் துறையினர் கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தப்பட்டு வருவதும், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து கடத்தப்பட்டு நாகையின் பல்வேறு கிராமங்களில் விற்பனை செய்வதும் வாடிக்கையாகி இருக்கிறது. இதனால் சாராய வியாபாரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்துவருகின்ற்னர்.
இந்நிலையில் வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாபராமபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனக்கு சொந்தமான விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு முன்னால் நிறுத்திவிட்டு வழக்கம்போல் இரவு உறங்கச் சென்றார். காலையில் அவர் எழுந்து பார்த்தபோது இரு சக்கர வாகனம் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது, இர்னடு அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இந்தக் காட்சியைக் கொண்டு கீழையூர் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல அதிகாலை 3 மணி அளவில் பரவை காய்கறி சந்தைக்கு சென்ற தெற்கு பொய்கைநல்லூரில் சேர்ந்த ஷரிப்முகமது என்பவரை கத்தி முனையில் மூன்று இளைஞர்கள் மிரட்டி இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தப்பித்துள்ளனர். நாகை வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இதுபோன்று இருசக்கர வாகனம் ஆடுகள் மற்றும் செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: TN Urban Local Body Election News LIVE: வேலூர்: 8வது வார்டு கவுன்சிலர் எதிர் போட்டியின்றி தேர்வு