ஓய்வுபெற்ற போக்குவரத்து துறை அலுவலர் வீட்டில் 36 பவுன் நகைகளைத் திருடிய பெண் உள்ளிட்ட

  இருவர்களை கும்பகோணம் தாலுகா காவல் நிலைய  போலீஸார் கைது செய்து, திருடிய நகைகளை மீட்டனர். கும்பகோணம் அஞ்சுகம் நகரைச் சேர்ந்தவர் வீராசாமி (74). ஓய்வுபெற்ற போக்குவரத்து துறை அலுவலர். கடந்த அக்டோபர் 30 ஆம் தேதியன்று வீட்டில் தனியாக இருந்த வீராசாமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், பீரோவில் வைத்திருந்த நகைகளை அவர் நேற்று எடுக்க முயன்றபோது,  அந்நகைகள் திருடுபோயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரினபேரில், கும்பகோணம் தாலுகா காவல் நிலைய  போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.


அவ்விசாரணையில் வீராசாமியின் வீட்டில் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் குடியிருந்த தாமரை செல்வி (42), அவரது உறவினர் பாலாஜி (25) ஆகியோர், வீராச்சாமிக்கு சொந்தமான நகைகளை திருடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்து களவுபோன 36.5 சவரன் (292 கிராம்) நகைகளை மீட்டனர். இதன் மதிப்பு 11 லட்சம் ஆகும். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசார் விசாரணையில், திருவிடைமருதூர் அருகே உள்ள கரிக்குளத்தில் வசித்துவரும் தாமரைச்செல்வி (42) சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் வீராசாமியின் வீட்டு மாடியில் வாடகைக்கு குடியிருந்துள்ளார். அந்த பழக்கத்தில் வீராசாமியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார்.




சம்பவத்தன்று வீராசாமியின் மகள் சங்கீதா, மருமகன் வெங்கட்ராஜ் ஆகிய இருவரும் படத்திறப்பு  விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்திற்கு காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது, வீராசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக வீராசாமி மயக்கமடைந்த நிலையில், தாமரைச் கும்பகோணம் கோகுலம் நகரைச் சேர்ந்த தாமரைச்செல்வியும், இளங்கார்குடியைச் சேர்ந்த பாலாஜியும், எதிர்பாராதவிதமாக, வீராச்சாமி வீட்டுக்கு சென்று சந்தித்து உடல் நலம் விசாரித்துள்ளனர். அப்போது தனக்கு உடல் நிலை சரியில்லை அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு, வீட்டை சரியாக பூட்டாமல் சென்றுள்ளார். இதனை அடுத்து, வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அங்கிருந்த சாவி மூலம் பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த நகைகளைத் திருடிக்கொண்டு மீண்டும் பீரோவை பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதற்கிடையே வீராசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக அக்கம்பக்கத்தினர் போனில் தொடர்பு கொண்டு தெரிவித்ததைத் தொடர்ந்து, ஆண்டிமடத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த சங்கீதாவும் அவரது கணவர் வெங்கட்ராஜும் திரும்பி பாதி வழியிலேயே வந்து வீராசாமியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் திருடு போயிருப்பது அப்போது வீராசாமியின் குடும்பத்தினருக்கு தெரியாது. இந்நிலையில், மருத்துவ செலவிற்காக நகைகளை எடுக்க முயன்றபோதுதான் அவை காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது.  இது குறித்து தாலுக்கா காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.




புகாரின் பேரில்,  கும்பகோணம் தாலுகா காவல் நிலைய போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அவ்விசாரணையில் சம்பவத்தன்று மஞ்சள் நிற சுடிதார் அணிந்த பெண் ஒருவர் மற்றொரு நபருடன் வீட்டிற்கு வந்து சென்றுள்ளது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, தாமரைச் செல்வியைப் பிடித்து விசாரணை செய்தனர். அகில், தாமரைசெல்வியும், அவரது உறவினரான பாலாஜி என்பவரும் சேர்ந்து நகைகளை திருடியிருப்பது தெரியவந்தது என்றனர்.