தஞ்சாவூர்: எடப்பாடி பழனிசாமியுடன் தவெக தலைவர் விஜய் சேருவார் என்று கனவில் கூட நினைக்க வேண்டாம் என்று தஞ்சாவூரில் பெங்களூர் புகழேந்தி திட்டவட்டமாக தெரிவித்தார்.

Continues below advertisement

தஞ்சையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 2026-ல் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர்களை தேடி அலைகிற சூழல் வரும். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக்கொண்டேன் என கூறவில்லை. எடப்பாடி பழனிச்சாமியுடன் விஜய் சேர்ந்தால் காணாமல் போய்விடுவார். எடப்பாடி பழனிசாமியுடன் விஜய் சேருவார் என கனவில் கூட நினைக்க வேண்டாம்.

வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள், மோசமான வழங்குகள் உள்ளவர்களுடன் விஜய் கூட்டணி  வைக்க தயாராக இல்லை. விஜய் யாருக்கும் கிடைக்கவும் இல்லை. யாரிடமும் பேசவும் இல்லை. விஜய் கரூர்க்கு பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். கூட்டணி இல்லாமல், உட்கட்சி பிரச்சினையை சரி செய்யாமல் எந்த கட்சியும் இனி ஜெயிக்கப்போவதில்லை. எல்லோரையும் சேர்த்து போகவேண்டும் என்ற மனப்பக்குவம் இல்லாத பழனிச்சாமியும், உதயகுமாரும் மற்றவர்களும் எதையும் சாதிக்க முடியாது.

Continues below advertisement

வரும் தேர்தலில் பெரிய படுதோல்வி ஏற்படும் என்பதில் மாற்றுகருத்து எனக்கு கிடையாது. எடப்பாடி பழனிச்சாமியுடன் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் எந்த தொகுதியிலும் போட்டியிட வரமாட்டார்கள்  அதுதான் நடக்க போகிறது.

வரும் 2026-ல் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர்களை தேடி அலைகிற சூழல் வரும். எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக் கொண்டேன் என்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கூறவில்லை.  எடப்பாடி பழனிச்சாமியுடன் சேர்ந்தால் தவெக தலைவர் விஜய் காணாமல் போய்விடுவார். எடப்பாடி பழனிசாமியுடன் விஜய் சேருவார் என கனவில் கூட நினைக்க வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கரூர் சம்பவத்திற்கு பின்னர் தவெக தலைவருக்கு ஆதரவாக பல இடங்களிலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அரசியல் வட்டாரங்களில் அதிமுக கூட்டணியில் தவெக தலைவர் விஜய் இணைவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.