திராவிடர்களாகிய நமக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆட்சி உள்ளது. நேரம் வரும் போது அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை எதிர்க்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைவதில் தவறில்லை, எடப்பாடி கூட இணைந்து வருவார் என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.


காந்தி ஜெயந்தி மற்றும் காமராசர் நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களது படங்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:


நானும் சசிகலாவும் சந்திக்க வேண்டிய அவசியமில்லை, அரசியல்ரீதியாக ஓ.பி.எஸ். சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். சமயம் வரும் போது அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை எதிர்க்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைவதில் தவறில்லை. எடப்பாடி கூட இணைந்து வருவார். அவர் இப்போது வேண்டுமானால் பேசலாம்.  ஆனால் வீட்டுக்கு போலீஸ் போனால் எப்படி பேசுவார் என்பது எனக்கு தெரியும். வீட்டுக்கு போலீஸ் போனால் எடப்பாடி பயப்படுவார்.


தமிழகத்தில் தற்போது போதை சாம்ராஜ்யம் நடைபெற்று வருகிறது. மது அரக்கனையெல்லாம் தாண்டி போதை பொருள்களை மாணவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனை தடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக முதல்வருக்கு உள்ளது. திராவிடர்களாகிய நமக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆட்சி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.