உணவு ஒவ்வாமை மற்றும் காய்ச்சல் காரணமாக அமுமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடந்த சில நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் நிர்வாகிகள், உறவினர்கள் இல்ல திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதற்காக அவர் தஞ்சையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார். அங்கிருந்து பல ஊர்களில் நடந்த நிகழ்ச்சிகளில் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டார். இந்நிலையில் நேற்று காலை முதல் காய்ச்சல் உட்பட அறிகுறிகள் இருந்ததால் அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில் டி.டி.வி.தினகரனுக்கு உணவு ஒவ்வாமை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


 



மருத்துவமனையில் டி.டி.வி. தினகரன் - காரணம் என்ன..? - எப்போது டிஸ்சார்ஜ்...!


தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் காய்ச்சல் மற்றும் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்தனர். மேலும் இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. டி.டி.வி.தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். அவர்களிடம் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. அவர் நலமுடன் உள்ளார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்ததை அடுத்து தொண்டர்கள் கலைந்து சென்றனர்.






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண