மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி தாலுக்கா அகரஆதனூர் கிராமத்தை  சேர்ந்தவர் 37 வயதான மதன்மோகன். இவர் கடந்த 2019-ம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தின் விவசாயக்கடன் பெற்று 2 டிராக்டர்களை வாங்கியுள்ளார். கொரோனா தொற்றுக்காலத்தில் தவணை முறையாக செலுத்த முடியாத நிலையில் 2021-ல் மதன்மோகனின் 2 டிராக்டர்களையும் ஜப்தி செய்ததோடு அவரது கையெழுத்தை போலியாக போட்டு பெயரை மாற்றி டிராக்டரை விற்பனை செய்து மோசடி செய்ததாக மதன்மோகன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்நிலையில் அவர் அளித்த புகாரின் பேரில் எந்த ஒரு  நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்கப்படாத நிலையில், 2021- ம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மதன்மோகன் அவரது தாய் உமாமகேஸ்வரியுடன் தீக்குளிக்க முயற்சி செய்தார். அதன் பின்பும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் 2022 -ம் ஆண்டு மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு விஷம்குடித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சிசெய்தார்.

புதுக்கோட்டையை அதிரவைத்த இரட்டை கொலை; 4 மாதங்களுக்குப் பிறகு இருவர் கைது - துப்புதுலங்கியது எப்படி?

அப்போதும் அவருக்கு தீர்வு கிடைக்காத நிலையில், மதன்மோகன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனு அளித்து வந்ததை அடுத்து கடந்த மார்ச் மாதம் தனியார் டிராக்டர் நிறுவன உரிமையாளர்கள் 2 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை, இதனால் அதிர்ச்சி அடைந்த மன்மோகன் காவல்துறையினரை கண்டித்து இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Cyclone Mocha: 2023-ம் ஆண்டின் முதல் புயல் – “மோக்கா” உருவாக வாய்ப்பு அடுத்த வாரத்தில் மழை, காற்று என கலக்கப்போகிறதா?

இதனை தொடர்ந்து மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம்  பேச்சுவார்ததை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டார்.  விவசாயியை ஏமாற்றி அவரின் வாழ்வாதாரத்தை பறித்து சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக போராடி வரும் விவசாயினை கண்டு பலரும் வருத்தத்தையும் , நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர். 

PC Sreeram : 'ஆபாச பிரச்சார திரைப்படமா'? மக்களை பிரித்து ஆட்சிக்கு வர முயலுகிறீர்கள்...தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வெளுத்து வாங்கிய பி.சி. ஸ்ரீ ராம்..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண