தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கடந்த 4ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தமிழக அரசு விடுமுறை அளித்திருந்தது. ஆனால் மறுநாட்கள் தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிற்ற கிழமை வந்ததால், தமிழக அரசு வெள்ளி கிழமை விடுமுறை அறிவித்ததை தொடர்ந்து உள்ளிட்ட மற்ற நாட்களும் விடுமுறையானது.
தீபாவளி பண்டிகையை வியாழக்கிழமை கொண்டாடிய பொது மக்கள் மறுநாட்களான வெள்ளிகிழமை கொண்டாடினர். பின்னர் சனிக்கிழமை என்பதால், வெளி மாநில, மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தஞ்சாவூருக்கு சுற்றுலாவாக வந்துள்ளனர். மேலும், கொரோனா தொற்று காரணத்தால், கடந்தாண்டு முதல், வெளி மாநில, மாவட்ட மக்கள், கோயிலுக்கு தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், தமிழக அரசு கொரோனா தொற்று விதிமுறைகளை தளர்த்தியதையடுத்து, மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தஞ்சாவூரிலுள்ள பெரிய கோயில், மாரியம்மன்கோயில், துளைகால்மண்டபம், சரஸ்வதி மகால், தர்பார் ஹால், அரண்மனை உள்ளிட்ட அனைத்து கோயில்களிலுள்ள சுவாமிகளை தரிசனம் செய்வதற்காக குவிந்தனர். இதனால் தஞ்சாவூர் காந்திஜி ரோடு, தஞ்சாவூர் பெரிய கோயில் சாலை, அண்ணா சாலை, கீழராஜவீதி, தெற்கு ராஜ வீதி, தெற்கலங்கம், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெரும்பாலானவர்கள், சொந்தமான கார்களில் வந்ததால், சாலைகள் முழுவதும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதே போல் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், ஒட்டக்கூத்தர் சமாதுள்ள வீரபத்திரர் கோயில், பட்டீஸ்வரம் துர்கையம்மன் கோயில், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில், ஆதிகும்பேஸ்வரர் கோயில் உள்ளிட்ட மகாமக தொடர்புடைய அனைத்து சிவ, வைணவ கோயில்களில் வெளி மாநில, மாவட்ட மக்கள் தரிசனத்திற்காக வந்திருந்தனர். இதனால் கும்பகோணம் பஸ் நிலையம், ஆயிகுளம் ரோடு, பிடாரிஅம்மன் கோயில் ரோடு உள்ளிட்ட அனைத்து பிரதான சாலைகளும் மக்கள் கூட்டமாக காட்சியளித்தது. கோயில் தரிசனத்திற்காக வந்த மக்கள் கூட்டத்தால், பெரிய, சிறிய ஹோட்டல்களில் கூட்டம் அலைமோதியது. கார்களில் வந்த பெரும்பாலானோர், தங்களது குடும்பத்திற்கு தேவையான உணவுகளை தயாரித்து எடுத்து வந்து, குடும்பத்துடன் கூட்டாஞ்சோறு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
இது குறித்து அறந்தாங்கியை சேர்ந்த ஜெயசீலாசெந்தில் கூறுகையில், வருடந்தோறும் வீடு உள்ளிட்ட பல்வேறு வேலைகாளால் மன உளைச்சல் உள்ளிட்டவைகள் ஏற்படுகிறது. கணவன்மார்கள் பணி வேலையாகவும், வீட்டுக்கு தேவைகள் செய்து வருவதால் அவரது மனமும் அலைந்து கொண்டிருக்கும். குழந்தைகளும் பள்ளி, கல்லுாரிக்கு செல்வதால், அவர்களும் மன இறுக்கத்துடன் இருப்பார்கள். இதனால் ஒரு நாட்களாவது நிம்மதியுடன், எந்த விதமான மன உளைச்சல், இறுக்கம் இல்லாமல் இருக்கும் வகையில், தீபாவளி பண்டிகையை பயன்படுத்தி, குடும்பத்துடன், உணவுகளை சமைத்து கொண்டு, அனைவரும் சந்தோஷத்துடன் சாப்பிட்டு விட்டு, கோயில்களில் தரிசனம் செய்வோம். இது போன்ற வருடத்திற்கு ஒரு நாள் குடும்பத்துடன் சென்று வந்தால், அந்த வருடம் சந்தோஷமாகவும், சிறப்பாக இருக்கும் என்றார்.