தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் தென்மேற்கு பருவழை முடிந்து வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த மாதம் 29 -ம் தேதி தாமதமாக வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் கூட தற்போது தமிழகம், புதுச்சேரி, காரைக்காலின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இருதினகளுக்கு முன்பு மழை தொடங்கிய தற்போது வரை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஏறக்குறைய மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி உள்ளது. 




Headlines Today : பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு.. வெளுக்கும் மழை.. இன்னும் முக்கியச் செய்திகள்..


கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 19 சென்டிமீட்டர் மழையும், குறைந்த பட்சமாக மயிலாடுதுறையில் 2.1 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. மேலும் பல இடங்களில் கனிசமான அளவு மழை பெய்து இருந்தது. இதேபோல் தமிழ்நாட்டின் பிற இடங்கள், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்து வருகின்றன. இந்த பகுதிகளில் இன்னும் சில நாட்கள் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு செய்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Schools Leave: விரட்டி விரட்டி வெளுக்கும் கனமழை... தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா?




அதன்படி இன்று நவம்பர் 4 -ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும்  பெய்யவாய்ப்புள்ளது.


Rasipalan November 04: கும்பத்துக்கு மாற்றம்... மீனத்துக்கு பெருமை...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்..




இந்நிலையில் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனமழையின்  காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில்   பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை புதுச்சேரி கல்வித்துறை  வெளியிட்டுள்ளது. அதேபோன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கிய மழையது இடைவிடாது தற்போது வரை கனமழையாக பெய்து வருகிறது இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  இன்று இரண்டாவது நாளாக விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தொடரும் கனமழை: இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...?


மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற