நாள்: 04.11.2022


நல்ல நேரம்:


காலை 12.15 மணி முதல் காலை 01.15 மணி வரை


மாலை 04.45 மணி முதல் மாலை 05.45 மணி வரை






 

காலை 01.45 மணி முதல் காலை 02.45 மணி வரை




மாலை 06.30 மணி முதல் மாலை 07.30 மணி வரை


இராகு:


காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


குளிகை:


காலை 07.30 மணி முதல் காலை 09.00 மணி வரை


எமகண்டம் :


மதியம் 03.00 மணி முதல் மதியம் 04.30 மணி வரை


சூலம் - மேற்கு


மேஷம்


குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். பொதுமக்கள் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இணையம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். கவலைகள் குறையும் நாள்.


ரிஷபம்


வியாபாரத்தில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். ஆதாயம் நிறைந்த நாள்.


மிதுனம்


பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.  புதிய பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள்.  நண்பர்களின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தின் மூலம் நன்மை ஏற்படும். செய்தொழிலில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.


கடகம்


மற்றவர்களிடம் உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் மந்தத்தன்மையும், ஒருவிதமான உடல் சோர்வும் ஏற்பட்டு நீங்கும். செல்வாக்கு தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். திருப்பம் நிறைந்த நாள்.


சிம்மம்


பிள்ளைகளால் செல்வாக்கு உயரும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உழைப்பு நிறைந்த நாள்.


கன்னி


வர்த்தகம் தொடர்பான வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக்கொள்வீர்கள். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் முயற்சிக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். சிந்தனை நிறைந்த நாள்.


துலாம்


செய்யும் முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திருப்தியான சூழல் உண்டாகும்.  சிலருக்கு அவரவர்களின் முயற்சிக்கு ஏற்ப பதவி உயர்வு கிடைக்கும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அமைதி நிறைந்த நாள்.


விருச்சிகம்


கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்பும் அதிகரிக்கும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். வெளியூரிலிருந்து புதிய வேலை தொடர்பான செய்திகள் கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். தாமதம் விலகும் நாள்.


தனுசு


உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வியாபார பணிகளில் வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கு ஏற்ப பொறுப்புகள் அதிகரிக்கும். சோர்வு குறையும் நாள்.


மகரம்


விலகி இருந்தவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. புதிய வேலை நிமிர்த்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வழக்கு சார்ந்த பணிகளில் இழுபறிகள் குறையும். ஆலய தரிசனம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நிதானம் வேண்டிய நாள்.


கும்பம்


குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்கி  மகிழ்வீர்கள். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். குடும்பத்தில் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மாற்றம் நிறைந்த நாள்.


மீனம்


வியாபாரம் ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மனதில் சில நிகழ்வுகளின் மூலம் தெளிவு பிறக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.  வாக்கு சாதுரியத்தின் மூலம் தடைபட்ட சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான காரியங்களில் சிந்தித்து செயல்படவும். பெருமை நிறைந்த நாள்.