தஞ்சையில் சமீபகாலமாக ஆன்லைன் சைபர் க்ரைம் மோசடிகள் அதிகரித்துள்ள நிலையில், தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி. கென்னடி மற்றும் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர், தற்போதைய காலக்கட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது. வங்கியிலிருந்து மேனேஜர் பேசுகிறோம் அல்லது வங்கி ஊழியர் பேசுவதாக கூறி தங்களின் வங்கி  கணக்கு விபரம், ஏடிஎம் கார்டு விபரம், ரகசிய எண் போன்றவற்றையும் ஓடிபி எண் ஆகியவற்றையும் கேட்டால் கண்டிப்பாக தெரிவிக்க கூடாது. உங்கள் இடத்தின் மொபைல் டவர் அமைக்க உள்ளோம். பல லட்சம்  அட்வான்ஸ், மாதாமாதம் பல ஆயிரம் வாடகை தருகிறோம் என்று கூறி ஆவணங்களை அனுப்புங்கள், பணம் அனுப்புங்கள் என்று தெரிவித்தால் அதற்கு கண்டிப்பாக பதில் அளிக்கவோ, பணம் அனுப்பவோ கூடாது.




இதே போல் உங்களுக்கு அறிமுகமான நபர்களின் போலி பேஸ்புக் கணக்கை தொடங்கி அதன் வாயிலாக அவசர தேவை பணம் அனுப்பும் படி கேட்கும் சம்பவங்கள் நடக்கிறது. அவ்வாறு கேட்டால் பணம் அனுப்பக்கூடாது. பிரபலமான நிறுவனங்களின் பெயரில் போலியான வேலைவாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்து வரும் எஸ்எம்எஸ், இ-மெயில், ஆன்லைன் வேலை வெப்சைட் வாயிலாக விளம்பரங்களை அனுப்பி ஏமாற்றக்கூடும். அவர்கள் ஏதேனும் காரணம் கூறி பணம் கட்டச் கூறினால் ஏமாந்து விடக்கூடாது.  




இதேபோல் பைக்குகள், கார்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை குறைந்த விலைக்கு விற்பதாக கூறி வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது. பணம் அல்லது விலை உயர்ந்து பொருட்கள் பரிசாக கிடைத்துள்ளது. இதுபோன்று மோசடி செய்து பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்காமல் உஷாராக இருக்க வேண்டும். உங்களுடைய சுய விபரங்களை  அப்டேட் செய்ய வேண்டும் என வரும் போலியான மெசேஜ்களில் உள்ள லிங்கிற்கு சென்றால் பணம் இழப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. உங்கள் முதலீட்டிற்கு, தினந்தோறும் அதிக வட்டி தருவதாக போலியான  நிறுவனங்கள் பெயரில் வரும் மெசேஜ்களை நம்பி உங்கள் பணத்தை முதலீடு செய்து ஏமாந்து விடாதீர்கள்.


இதுபோன்ற மோசடிகள் மற்றும் ஓடிபி மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக உங்கள் வங்கி கண்ககிலிருந்து பணம் எடுக்கப்பட்டு இரு;நதால் பதட்டப்படாமல் சைபர் கிரைம் போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும். சைபர் கிரைம் போலீசாரை தொடர்பு கொள்ள முன்பு 155260 என்ற தொலைபேசி எண் செயல்பாட்டில் இருந்தது. தற்போது இந்த எண்ணிற்கு பதிலாக 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் என்றனர்.