நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகாமையில் உள்ள தெற்கு சிவசக்தி குடியிருப்பு பகுதி மழை நீரால் சூழ்ந்து தனி தீவாக காட்சியளிக்கிறது. பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியில் செல்ல முடியவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும், வடிகால் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகாமையில் உள்ள தெத்தி சிவசக்தி குடியிருப்பு பகுதி மழை நீரால் சூழ்ந்து தனி தீவாக காட்சியளிக்கிறது. பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியில் செல்ல முடியவில்லை எனவும் மழைக்காலம் தொடங்கி மழை நீர் வடியும் வரை வீட்டிற்கு வந்து பால் கொடுப்பவர்கள் வருவது இல்லை, சிவசக்தி நகர் செல்ல வேண்டும் என ஆட்டோ கேட்டால் ஆட்டோ வருவதில்லை என்கின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் அரசு ஊழியர்கள் என்பதால் அரசிடம் வலியுறுத்த முடியாத நிலை உள்ளதால் கடந்த 12 ஆண்டு காலமாக மழைக்காலங்களில் தனித் தீவாக துண்டித்து வாழ்வதாகவும் மழை பாதிப்பின்போது அரசு துறை அதிகாரிகள் பார்வையிட்டு செல்வதோடு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். வடிகால் வசதி செய்து பாலையூர் வாய்க்காலை தூர்வாரி அதிலிருந்து தேவநதியில் மழை நீரை இணைத்தால் மழை வெள்ள காலங்களில் பாதிப்பு ஏற்படாது என கருத்து தெரிவிக்கின்றனர்.



 

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் ஜானகி சீடன் கேட்டபோது, பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாகும் அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு உடனடியாக ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வார உத்தரவிட்டு அங்கு மழை நீரை வடிய வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாகையில் பெய்து வரும் கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கடல் சீற்றம் ஆகவே காணப்படுகிறது. கடலிலும் மழை பெய்து வருவதால் அக்கரைப்பேட்டை, கீச்சான் குப்பம், நம்பியார் நகர், செருதூர், விழுந்தமாவடி, வெள்ள பள்ளம், காமேஸ்வரம், ஆற்காட்டுதுறை, கோடியக்கரை வேதாரண்யம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. ஆழ்கடல் சென்று தங்கி மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்களுக்கு நாகை மாவட்ட மீன்வளத்துறையினர் தடை விதித்து அவர்கள் கடலுக்குச் செல்லும் டோக்கன் நிறுத்தப்பட்டுள்ளது.



 

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வேளாங்கண்ணி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வேளாங்கண்ணிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் மழையில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.