திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா பூந்தோட்டம் அடுத்துள்ள கோவில்திருமாளம் கிராமத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாய் மாமா  தட்சிணாமூர்த்தி வீடு அமைந்துள்ளது. இவரது மருமகள் உமாவும் இவரும் இங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அவர் 100 ஆவது பிறந்தநாள் கண்டுள்ளார். இந்நிலையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.


இந்நிலையில் இன்று சீர்காழிக்கு வெள்ள பாதிப்பை பார்வையிட வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவில் திருமாளம் கிராமத்திற்கு வருகை தந்து தாய் மாமாவிற்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவரிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்‌.




இதனைத்தொடர்ந்து,  அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜி, மெய்யநாதன். எ.வ. வேலு உள்ளிட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாய் மாமாவிடம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து ஆசி பெற்றனர். அதனை தொடர்ந்து வீட்டில் தேநீர் அருந்திவிட்டு முதல்வர் மு க ஸ்டாலின் சாலை வழியாக சென்னை புறப்பட்டார்.