திருவாரூர் மாவட்டத்தில் 273 கிராமங்களுக்கு பயிர் காப்பீடு வழங்காததை கண்டித்து மாவட்ட ஆட்சியர் முன்பாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.


காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என மூன்று போகம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாததன் காரணத்தினாலும் பருவ மழை பொய்த்து போனதன் காரணத்தினாலும் ஒருபோக சம்பா சாகுபடியை மட்டும் விவசாயிகள் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் மீண்டும் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மீண்டும் டெல்டா மாவட்டங்களில் மூன்று போகம் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இந்த ஆண்டு கடந்த 25 ஆண்டுகளுக்கு பின்னராக மேட்டூர் அணை மே மாதம் 24 ஆம் தேதியே தமிழக முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது இந்த நிலையில் மீண்டும் இந்த ஆண்டு மூன்று போகம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.




ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு இயற்கை இடர்பாடுகளில் இருந்து மீண்டு தங்களது நெல் பயிர்களை பாதுகாப்பது மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது அந்த வகையில் விவசாயிகளுக்கு இயற்கை இடர்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு கை கொடுப்பது பயிர் காப்பீடு ஆகும். அந்த வகையில் கடந்த 2021-22 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகை என்பது தமிழக அரசால் விடுவிக்கப்பட்டது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 273 கிராமங்களுக்கு பயிர் காப்பீடு இல்லை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கு விவசாயிகள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் காயத்திற்கு கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன் விவசாயிகள் கடந்த 2021-22 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகை அறிவிக்கப்பட்டது அதே நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் 273 கிராமங்களுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை ஆகையால் பயிர் காப்பீடு தொகை பாரபட்சமின்றி அனைத்து கிராமங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் மேலும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாயி குறை தீர் கூட்டத்தல்  அனைத்திலும் பங்கேற்க வேண்டும்.




மேலும் இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது அதே நேரத்தில் அறுவடை பணிகள் நடைபெறும் பொழுது தொடர்ந்து கன மழை பெய்ததன் காரணத்தினால் 50000 ஏக்கருக்கும் மேல் நெல் பயிர்கள் முழுவதுமாக பாதித்துள்ளது ஆகையால் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுமையாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அது மட்டுமின்றி தற்பொழுது சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் தற்பொழுது மழை பெய்தால் சிறுகுரு வாய்க்கால்கள் மட்டுமல்லாமல் ஆறுகள் உட்பட பல இடங்களில் தூர் வாரும் பணிகள் முழுமையாக நடைபெறாததன் காரணத்தினால் தண்ணீர் வயலில் தேங்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது இதனால் சம்பா நெல் பயிர்களும் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகும் ஆகையால் இடைப்பட்ட காலத்தில் சிறுகுரு வாய்க்கால்களை முழுமையாக தூர் வாருவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் முன்பாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அதன் பின்னர் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் முன்பாக விவசாயிகள் எடுத்து வைத்தனர்.