மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையே 38 ஆண்டுகளுக்கு முன்புவரை இயங்கிவந்த மீட்டர்கேஜ் ரயில் சேவையை அகலப்பாதையாக மாற்றுவதாக கூறி மக்களை ஏமாற்றி அதனை நிறுத்திவிட்டனர் என்றும் மயிலாடுதுறை ஜங்சனில் எஸ்கலேட்டர் அமைக்க 3.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த மக்களவை தொகுதி வளர்ச்சி நிதியை நிராகரித்து ரயில்வே துறை நிதியில்  செய்யப்படும் என்று கூறிய பணிகள் நடைபெறவில்லை என மயிலாடுதுறையில் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.




மயிலாடுதுறையில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஜெயின் சங்க அமைப்புகளுடன் டாக்டர் கலைஞர் பவுன்டேஷன் இணைந்து இலவச பொது மருத்துவ முகாமை நடத்தியது. இதில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் கலந்துகொண்டு முகாமை தொடக்கி வைத்தார், தொடர்ந்து தானும் பரிசோதனை செய்துகொண்டார். மேலும், யோகா கலையில் கின்னஸ் சாதனை படைத்த தாரா அக்ஷரா என்ற மாணவியை அவர் பாராட்டி சால்லை அணிவித்து, ரொக்கப்பரிசு வழங்கினார். 


EPFO Recruitment 2023: 185 பணியிடங்கள்; மாதம் ரூ.81,100 வரை ஊதியம்; வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரம் இங்கே!




அதனைத் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையே 38 ஆண்டுகளுக்கு முன்புவரை மீட்டர்கேஜ் ரயில் சேவை இயங்கியது. இதனை, அகலப்பாதையாக மாற்றுவதாக கூறி மக்களை ஏமாற்றி அதனை நிறுத்திவிட்டனர். பலமுறை மக்களவையில் இதுகுறித்து பேசியும், கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.


Share Market: வாரத்தின் முதல் நாளில் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை; 17 ஆயிரம் புள்ளிகளில் நிஃப்டி!




அதேபோன்று மயிலாடுதுறை ஜங்சனில் முதல் பிளாட்பார்மில் இருந்து 3-வது பிளாட்பார்ம் செல்ல  எஸ்கலேட்டர் அமைக்க 2022-23-ஆம் ஆண்டுக்கான மக்களவை தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து 3.25 கோடி ரூபாய் செலுத்தியும், மதிப்பீடுகள் முடிவடைந்தும் இன்று வரை பணிகள் நடைபெறவில்லை. தற்போது கிடைத்த தகவலின்படி ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் இந்த பணியை ரயில்வே துறை சார்பில் செய்து தருவதாக சொல்லியுள்ளனர். இதனை உடனடியாக முடித்துத் தர வேண்டும். இதேபோல், கும்பகோணம் ரயில் நிலையத்தை மேம்படுத்த நான் விடுத்த கோரிக்கையை ஏற்று, மேம்பாட்டுப் பணிக்காக 68 கோடி ரூபாய் ஒப்புதலாகியுள்ளது என்றார்.


Vignesh Shivan - Nayanthara: "உயிரே..உலகே” :இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்..!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண