EPFO Recruitment 2023: 185 பணியிடங்கள்; மாதம் ரூ.81,100 வரை ஊதியம்; வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரம் இங்கே!

EPFO Recruitment 2023 : பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு விவரத்தினை இங்கே காணலாம்.

Continues below advertisement

பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் (Employees' Provident Fund Organisation) உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இம்மாதம் (ஏப்ரல்) 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்பதை பற்றி கீழே காணலாம்.

Continues below advertisement

பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் உள்ள 185 குரூப் சி ஸ்டெனோக்ராபர் பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி விவரம் :

Stenographer (Group C)

மொத்த பணியிடங்கள் - 185

கல்வித் தகுதி: 

இந்தப் பணியிடத்திற்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

கம்யூட்டரில் ட்ரான்ஸ்க்ரைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: 

இந்தப் பணிகளுக்கு  Level-4 in the Pay Matrix-இன் படி, ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடம்:

இந்தப் பணிக்கு தேர்தெடுக்கப்படுபவர்கள் நாடு முழுவதும் உள்ள பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர். 

வயது வரம்பு :

இதற்கு விண்ணப்பிக்க 18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பில்  அரசு விதிகளின் படி இடஒதுக்கீடு வழங்கப்படும். 

தேர்வு முறை:

இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மற்றும் திறனறிவுத் தேர்வு  ஆகியவற்றில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்தெடுக்கப்படுவர். 

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்


முதல்நிலைத் தேர்வு


ஆன்லைன் எழுத்துத் தேர்வில் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண் வழங்கப்படும். 

கேள்விகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இருக்கும். 

மொத்தம் 800 மதிப்பெண் ஆன்லைன் எழுத்துத் தேர்வு இருக்கும். 

இதில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் திறனறிவுத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

திறனறிவுத் தேர்வு

பத்து நிமிட டிக்டேட்சன் தேர்வு நடத்தப்படும். ஒரு நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் கம்யூட்டரில் டைப் செய்ய வேண்டும். இதோடு ’Transcription’ தேர்வு நடைபெறும்.

தேர்வு மையங்கள்:

விண்ணப்பதாரர்களின் வசதிக்கேற்றவாறு தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்ப கட்டணம் :

இதற்கு தேர்வு கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.700 செலுத்த வேண்டும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர்,மகளினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோரு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். யு.பி.ஐ., கிரெடிட் கார்ட், மாஸ்டர் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்டவைகளை பயன்படுத்தியும் கட்டணத்தை செலுத்தலாம். 

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  ஆன்லைனில் விண்ணப்பிக்க https://upsconline.nic.in/upsc/OTRP/index.php -என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 26.04.2023

முக்கிய அறிவிப்பு:


எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பு தேசிய தேர்வுகள் முகமை-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.upsc.gov.in/- விவரம் வெளியிடப்படும். இதற்கான தேர்வை தேசிய தேர்வுகல் முகமையின் கீழ் நடத்தப்படுகிறது.

ஊதிய விவரம், கல்வித் தகுதி உள்ளிட்டவைகள் குறித்த கூடுதல் / முழு விவரத்திற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் https://recruitment.nta.nic.in/EPFORecruitment/File/ViewFile?FileId=1&LangId=P - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


 

Continues below advertisement
Sponsored Links by Taboola