நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அருகே சன்னியாசி பனங்குடி கிராமத்தில் உள்ள தாளரணேசுஸ்வரர் கோவிலில், கடந்த 1992ம் ஆண்டு ஆடிப்பூர அம்மன் மற்றும் விநாயகர் உலோக சிலை உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போனது. இது குறித்து திட்டச்சேரி போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் 1993ஆம் ஆண்டு சிலை கண்டுபிடிக்க முடியவில்லை என போலீசார் வழக்கை முடித்தனர். இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவில், பல்வேறு மாவட்டங்களில் இருந்த அனைத்து சிலை திருட்டு வழக்குகளும் கண்டுபிடிக்க முடியாத வழக்குகள் உள்பட அனைத்து வழக்கையும் சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு மாற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து சிலைகள் மாயமாகி வழக்குப்பதிவு செய்யப்பட்டு  ஆவணங்கள் இல்லாத வழக்குகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தமிழக டி.ஜி.பி.,சைலேந்திரபாபு உத்தரவிட்டார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., ராஜாராம் தலைமையில் இன்ஸ்பெக்டர் இந்திரா, எஸ்.ஐக்கள் தமிழ்செல்வன், பாலச்சந்திரன் அடங்கிய போலீசார் நடத்திய விசாரணையில், திட்டச்சேரி சிலை வழக்கில் ஆவணங்கள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.




இதில், திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவில் பல்வேறு கோவிலுக்கு செந்தமான சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்து அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் மற்ற சிலைகளுக்கு ஆவணங்கள் இருந்த நிலையில், அங்கிருந்த ஆடிப்பூர அம்மன் சிலை, விநாயகர் சிலைகள் ஆவணங்கள் இல்லாமல் இருந்ததும், 1992 ஆண்டுக்கு முன் மாயமானதாக கருதப்பட்ட ஆடிப்பூர அம்மன்,விநாயகர் சிலை என தெரியவந்தது. இதையடுத்து அந்த இரு சிலைகளும் மீட்கப்பட்டு நேற்று முன்தினம் திருச்சியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்தில் கொண்டு செல்லப்பட்டது. இதனை  தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு பார்வையிட்டார்.




பின்னர்  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில்,  இரண்டு சிலைகளையும், தலைமை குற்றவியியல் நீதித்துறை நடுவர் நீதிமற்றத்தில் முன்பு ஒப்படைக்கப்பட்டது.  இதனை விசாரணை செய்த நீதிபதி சண்முகப்பிரியா, இரண்டு சிலைகளையும் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்க உத்தவிட்டார். இதனால் சிலைகள் போலீசார் பாதுகாப்பாகவுடன், சிலைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டது.


இது குறித்து போலீசார் கூறுகையில், மாயமானதாக கூறப்பட்ட சிலைகள் 29 ஆண்டுகளுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சிலைகள் ஒரிஜினல் சிலைகள் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது.  1992 ஆண்டு திருடுபோய் பின் மீட்கப்பட்டு பாதுகாப்பு கருதி திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ஒப்படைக்கப்பட்டது. அதற்கான ஆவணங்கள் மாயமான நிலையில் அந்த ஆண்டில் சிலைகளை மாட்டு வண்டியில் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சிலைகளை கொண்டு சென்ற 80 வயது முதியவர் மற்றும் அந்த ஆண்டில் பணியிலிருந்த டிஎஸ்பி பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோயிலுக்கு எழுதிய கடிதம் மூலம் துப்பு துலக்கப்பட்டது. இந்த சிலைகளை மீட்டு அவ்வூர் பொதுமக்கள் பொதுமக்களிடம் காட்டியபோது தங்கள் கோயில் சிலை எனக் தெரிவித்தனர் என்றனர்.