மயிலாடுதுறை மாவட்ட சீர்காழி அருகே உள்ள மாதானம் கிராமத்தை சேர்ந்த சாமிதுரை என்பவரின் மகன் 29 வயதான சிவசண்முகம். இவர் அதே பகுதியில் சொந்தமான சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவரும் அருகில் உள்ள குமரக்கோட்டம் பகுதியை சேர்ந்த சம்பந்தம் என்பவரின் 25 வயதான விஜயலட்சுமி என்பவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கள் காதல் குறித்து இருவரும் தங்களது பெற்றோரிடம் கூறி திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளனர். இதற்கு விஜயலட்சுமியின் வீட்டார் மறுப்பு தெரிவித்து விட்டனர்.
இதனை தொடர்ந்து பலமுறை திருமண குறித்து பெற்றோரிடம் சமரசம் செய்ய விஜயலட்சுமி முயன்று, அவர்கள் இவர்களின் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, விஜயலட்சுமிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி தனது காதலனிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு- ஒரே பதிவு திட்டத்தை எதிர்ப்பது ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லும் காரணங்கள் இதுதான்...
இதனையடுத்து இருவர் வீட்டை விட்டு வெளியேறி திருமண செய்ய முடிவெடுத்து காதலர் தினமான இன்று இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரகோயில் மாரியம்மன் கோயில் சென்று அங்கே மணமாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்துகொண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து இருவரும் தங்களது குடும்பத்தினரால் உயிருக்கு ஆபத்து உள்ளது என கூறி, மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர்.
இதனையடுத்து இருவரையும் அழைத்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், இவர்கள் வசிக்கும் பகுதி புதுப்பட்டினம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால், அலுவல் ரீதியான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்திருந்த புதுப்பட்டி ரம் காவல் ஆய்வாளர் சந்திராவிடம், இவர்கள் இருவரின் பெற்றோரை அழைத்து பேசி சமாதானம் செய்து இருவரும் எவ்விதமான பிரச்சினையும் இல்லாமல் வழிவகை செய்யுமாறு வலியுறுத்தினார். மேலும் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தம்பதியினர் இருவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்த காவல்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். காதலர் தினமான இன்று 7 ஆண்டு காதலர்களாக இருந்து கணவன் மனைவியாக இணைந்துள்ள இவர்களை அங்குள்ள காவலர்கள் பலர் வாழ்த்தி சென்றனர்.
வீடு புகுந்து 87 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை: நடவடிக்கை எடுக்காத போலீசார்? டெல்லியில் அதிர்ச்சி