திருவாரூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நான்கு நகராட்சி 7 பேரூராட்சிகள் என மொத்தம் 216 வார்டுகளுக்கு நடைபெறவிருக்கிறது.இதில் மன்னார்குடி நகராட்சியில் மொத்தம் உள்ள 34 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்பது நடைபெறவிருக்கிறது .
இந்த நிலையில் மன்னார்குடி நகராட்சி தேர்தலில் திமுக சார்பில் 31 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பட்டதாரி பெண் வேட்பாளரான ஆசியா பேகம் ஹாஜா மொய்தீன் போட்டியிடுகிறார்.இவர் தனது வார்டில் உள்ள 10 க்கும் மேற்பட்ட தெருக்களில் காலை 7 மணி முதலே பிரச்சாரத்தை தொடங்கி விடுகிறார். அவர் போட்டியிடும் 31வது வார்டில் உள்ள ஒவ்வொரு தெருவுக்கும் என்னென்ன தேவை என்பதை பட்டியலிட்டு வைத்துக்கொண்டு பகுதி மக்களை வீடு வீடாக சென்று நேரில் சந்தித்து அவர்களிடம் ஆசி பெற்று வாக்கு சேகரித்து வருகிறார்.
இஸ்லாமிய பெண்ணான ஆசியா பேகம் தனது 31வது வார்டில் உள்ள விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்தி தனது பரப்புரையை தொடங்கினார்.மேலும் 31 வது வார்டு பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும், 31 வது வார்டில் உள்ள பூங்காக்களுக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி சாதனங்கள் அரசு சார்பில் வாங்கி தர நடவடிக்கை எடுப்பேன் எனவும்,குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் மற்றும் மண் சாலைகளாக உள்ள குறுக்குத்தெரு சாலைகளையும் புதுப்பித்து தார் சாலைகளாக மாற்றப்படும் எனவும்,கழிவுநீர் தேங்காமல் வெளியேறும் வகையில் மன்னார்குடியில் விரைவில் செயல்படுத்த உள்ள பாதாள சாக்கடை திட்டத்தில் 31வது வார்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் அந்த திட்டம் சென்று சேரும் வகையில் பணியாற்றுவேன் என்றும், மன்னார்குடி 31வது வார்டு மூவேந்தர் நகர் பகுதியில் உள்ள சில நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு அறநிலையத் துறையால் விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வரியை குறைக்க மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி ஆர் பி ராஜா வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,நாள்தோறும் தனது வார்டில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் என்ன பிரச்சினைகள் உள்ளது என்பதை ஆராய்ந்து அதற்கேற்ற சரியான வாக்குறுதிகளை சொல்லி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். இன்று காலை 31-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட அருணா நகர் ,நேதாஜி சாலை, வ.உ.சி சாலை பகுதிகளில் திமுக வேட்பாளர் ஆசியா பேகம் ஹாஜா மொய்தீன் வாக்கு சேகரித்தார்.
அப்போது 31வது வார்டு பகுதிக்கு என இதுவரை ரேஷன் கடை இல்லாததால் இப்பகுதி மக்கள் வெகு தூரம் நடந்து சென்று ரேஷன் பொருட்களை வாங்கிக்கொண்டு அதனை எடுத்து வர ஆட்டோவில் சென்று வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.நடுத்தர ஏழை எளிய மக்கள் வசிக்கும் 31 வது வார்டில் 2 பகுதிநேர ரேஷன் கடைகள் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்து வாக்கு சேகரித்தார்.
மன்னார்குடி நகராட்சி 31 வது வார்டில் போட்டியிடும் ஆசியாபேகம் கஜா புயல் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று கொரோனா காலங்களில் வீடு வீடாகச் சென்று கபசுர குடிநீர் கொடுத்து மக்களுக்கு சேவையாற்றியவர் ஆசியாபேகம்.மேலும் எனது குடும்பம் அப்பகுதியினர் கவுன்சிலர் குடும்பம் என்று அழைக்கப்படுகிறது.அந்தளவிற்கு தொடர்த்து மக்கள் சேவையில் அவர் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்