மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த கொள்ளிட ஆற்றின் கரையோர பகுதியில் அமைந்துள்ளது காடுவெட்டி கிராமம். இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதி திராவிடர் இன மக்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். மேலும் இவர்கள் காவிரி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள வெள்ளை மணல் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்று புறம்போக்கு நிலத்தில் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை காத்து வருகின்றனர்‌.




மேலும், அந்த இடத்திற்கு பல ஆண்டுகளாக வரி செலுத்தியும் வந்துள்ளனர். காலப்போக்கில் அந்த நிலத்திற்கு வரி வசூல் செய்வதை அரசு நிறுத்தி விட்டதாகவும்,  தற்போது கடந்த சில ஆண்டுகளாக தங்களை அப்பகுதியில் விவசாயம் செய்ய வனத்துறை அதிகாரிகள் அனுமதிக்காமல், விவசாயம் செய்ய செல்லும் எங்களை அடித்து விரட்டி, துன்புறுத்துவது மட்டுமின்றி எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வது, அந்த இடம் தொடர்பாக எங்களை மிரட்டி கையெழுத்து வாங்கிக் கொண்டு காலி செய்யுமாறு கூறி பல்வேறு இன்னல்களை கொடுத்து வருகின்றன.  


Gold, Silver Price : அதிர்ச்சியில் தள்ளும் தங்கம் விலை.. வெள்ளி விலையும் ஷாக் கொடுக்கும்.. இன்றைய விலை நிலவரம்!




இதுதொடர்பாக அரசு அதிகாரிகளுக்கும், முதல்வரின் தனி பிரிவு என பல்வேறு மனுக்கள் அளிக்கப்பட்டும், எங்களுக்கு எந்த தீர்வும் ஏற்படவில்லை என வேதனை தெரிவிக்கும் அப்பகுதி ஏழை விவசாய குடும்பத்தினர். தமிழக முதல்வர் இதனை கவனத்தில் எடுத்து தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வந்த எங்களுக்கு அந்த நிலத்தில் மீண்டும் விவசாயம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துவருகின்றனர்.


9 AM National Headlines: கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் நடந்தவை என்ன? முக்கியச் செய்திகள் உங்களுக்காக..




இந்நிலையில், தற்போது அங்கு விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். இதனை கண்ட சீர்காழி வனத்துறையினர் அங்கு வேலிகளை பிரித்தெறிந்து, செடிகளை பிடுங்கி பாழாக்கியுள்ளனர். மேலும் இதனை கண்டு பரிதவித்து வனத்துறை அலுவலர்களிடம் கேட்டதற்கு, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி பொய்வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அப்பகுதி ஏழை விவசாயிகள் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வனத்துறையினரால் பாதிப்புக்குள்ளாகும் தங்களை அரசு காக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Thoothukudi Book Fair : '11 தினங்கள் நடைபெற உள்ள தூத்துக்குடி புத்தக திருவிழா.. 120 அரங்குகள்..' ஆட்சியர் செந்தில்ராஜ் அளித்த தகவல்..




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண