இந்தியா:
- தனிநபரின் தனியுரிமையை உறுதி செய்யும் வகையில் கொண்டு வரப்பட்ட தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்படும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
- நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 5.9 சதவிகிதம் வரை உயரும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது.
- தமிழ்நாட்டில் திறந்தவெளியில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்துள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
- கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் சட்டருக்கு பா.ஜ.க. வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர மறுத்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட பாஜக வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைமை நேற்று வெளியிட்டது.
- மக்களவை தேர்தலில் 300 இடங்களில் பா.ஜ.க. வெல்லும் என அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
- “என் பதவியை பறிக்கலாம்; மக்களுடனான உறவை பிரிக்க முடியாது” - வயநாட்டில் ராகுல்காந்தி அதிரடி
- 'என் நாக்கில் முத்தமிடு' என தலாய்லாமா கேட்டபோது அந்த சபையில் சிரித்தவர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும், அவர்களுக்கு சவுக்கடி தர வேண்டும் என சின்மயி தெரிவித்துள்ளார்.
- இந்தியாவில் புதிதாக 5,676 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
- கொல்கத்தாவின் டம்டம் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் தேசிய கீதத்தை அவமரியாதையாகப் பாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதையடுத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
- குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் நடைமுறைகளை மாற்ற புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.
- கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதற்கு நான்காவது அலை காரணமல்ல. உருமாறிய ஒமைக்ரான் வகை தொற்றால் ஏற்பட்ட மூன்றாவது அலையின் பாதிப்பே தற்போதும் தொடர்கிறது. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை. தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் 4 - 5 நாட்களில் குணமாகிவிடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- அதிகளவில் முஸ்லிம்கள் வசிக்கும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நடப்பதாக கூறுவோர், எழுதுவோர் ஒருமுறை நேரில் வந்து பார்க்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் தெரிவித்துள்ளார்.
- வருடாந்திர ஊதிய உயர்வுக்கு அடுத்த நாள், அரசு ஊழியர் பணி ஓய்வு பெற்றாலும், ஊதிய உயர்வு பலன்களை பெறும் தகுதியை பெறுகிறார்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.