கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதியில் இருந்து திருச்சி அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி  உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 




இந்த நீரானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது. தொடர்ந்து வெள்ள நீர் அதிகரித்து வருவதால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள ஆற்றங்கரை தெரு, ஆற்றின் படுகையில் அமைந்துள்ள நாதல்படுகை உள்ளிட்ட பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அதேபோல் நாதல்படுகை மற்றும் முதலைமேடு திட்டு கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த 300 ஏக்கர் பரப்பளவிலான பருத்தி, சோளம், வெண்டை, கத்தரி, உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் மற்றும் முல்லை, மல்லி, செவ்வந்தி உள்ளிட்ட பூச்சொடிகள் முற்றிலுமாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. 


Cheetah: வருக... வருக... 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு அழைத்து வரப்படும் சிறுத்தை புலிகள்!




நேற்று முதல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாலும் மேற்கொண்டு சில தினங்களுக்கு தண்ணீர் குறைவதற்கான வாய்ப்பு இல்லாததாலும் பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்துள்ளதால் இதனால் சுடாத செங்கற்கள் முற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  


AIADMK Protest: முதல் போராட்டத்தை அறிவித்த இபிஎஸ்... மின்கட்டண உயர்வை கண்டித்து களமிறங்கும் அதிமுக!




இந்த சூழலில் பாதிப்புகள் குறித்து தகவல் அறிந்த சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் கொள்ளிடம், நாதல்படுகை மற்றும்  முதலைமேடு திட்டு ஆகிய கிராமங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தண்ணீர் சூழ்ந்துள்ள வீடுகளையும் பயிர்களையும் பார்வையிட்ட அவர்கள் அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தினர்.




மேலும் தற்பொழுது 1.25 லட்சம் கன அடி தண்ணீர் வரும் நிலையில் இன்று மாலைக்குள் 1.40 லட்சம் கன அடி தண்ணீர் வருவதற்கான வாய்ப்பு உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தி வருகிறார்கள்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண