மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த சுகாதார நிலையம் கடந்த 20 ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுப்பிக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 




அதனை அடுத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டு, பள்ளிவாசலுக்கு சொந்தமான இடம் மருத்துவமனை கட்டுவதற்காக இலவசமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. கிளியனூர் ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது காலித் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். 


6.35 லட்சம் பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி: திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்




அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் இந்து, இஸ்லாம் முறைகள் படி, துவா மற்றும் வேத மந்திரங்களுடன் நடைபெற்றது. தரைத்தளத்தில் 2 மருத்துவர் அறைகள், மருந்து கொடுக்கும் அறை, ஊசி போடும் அறை, ஆய்வகம், கட்டு கட்டும் அறை, காத்திருப்பு அறை, கிடங்கு, கழிவறைகள் கட்டப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கானோர் பயன்பெறும் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொது மருத்துவமனையாக மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகனிடம் அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். 


ATM Operations Change : ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுக்கும் முறையில் மாற்றம்...தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?




கடந்த சில நாட்களுக்கு முன்பு தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் செந்தில் கலந்துகொண்ட பூமி பூஜை நிகழ்ச்சியில் இந்து முறைப்படி பூமி பூஜை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதனை கண்ட நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்  திராவிட மாடல் திமுக ஆட்சி என சொல்லிக்கொள்ள கூடிய சூழலில், மத சம்பிரதாய நிகழ்வுகள் நடைபெற கூடாது என்றும், அவ்வாறு நடைபெற்றால் மும்மதங்களையும் அழைத்து நிகழ்ச்சி நடத்த வேண்டும் இல்லை எனில் நடத்தக்கூடாது என அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தமிழகத்தில் பெரும் பேசும் பொருளானது. இந்நிலையில் இன்று இந்து , இஸ்லாமிய முறைப்படி திமுக சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா குறிப்பிடத்தக்கதாகும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண