திருவாரூர் எல்லை அம்மன் சன்னதிக்கு அருகில் உள்ள குளத்துப்பட்டறை தெருவில் கூத்தாநல்லூரை சேர்ந்த பாத்திமா பர்வீன் என்பவருக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த பகுதியில் நகைக்கடைகள், நகை அடகு கடைகள் மற்றும் ஆபரண நகை செய்யும் கடைகள் என 25க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இடிந்து விழுந்த இந்த கட்டிடத்திற்கு கீழ் பத்துக்கும் மேற்பட்ட ஆபரண நகை செய்யும் கடைகள் உள்ளது. இந்த நிலையில் காலை நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் அந்தக் கட்டிடத்திற்கு கீழ் உள்ள நகை செய்யும் கடைகளில் பொருட்கள் மட்டும் சேதமடைந்தன. நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை இந்த சம்பவம் 10 மணிக்கு முன்னதாக நடைபெற்றதால் இந்த உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. 



 

இந்த வணிக வளாக கட்டிடம் 40 ஆண்டுகள் பழமையான கட்டிடம் என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த மழையின் போது இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள கடைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. விபத்து 10 மணிக்கு மேல் இந்த விபத்து நடைபெற்று இருந்தால் கண்டிப்பாக பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என வணிகர்கள் தெரிவித்தனர். மேலும் வணிக வளாக கட்டிடம் இடிந்து விழுந்த நேரத்தில் கடைகள் எதுவும் திறக்கப்படாத காரணத்தினால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் அதனை இடிக்க வேண்டும் என அப்பகுதி வணிகர்கள் தெரிவித்தனர். 



 

இதனை அடுத்து நகராட்சி நிர்வாகம் கூத்தங்குழி சேர்ந்த வணிக வளாக உரிமையாளரான பாத்திமா பர்வின் என்பவருக்கு  நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் பொதுமக்கள் மற்றும் அருகில் குடியிருப்போர் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள இந்த கட்டிடத்தை அறிவிப்பு கிடைத்த 15 தினங்களுக்குள் தங்களது சொந்த பொறுப்பில்  இடித்து அப்புறப்படுத்தி ஆபத்து ஏற்படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன் மூலம் அறிவுறுத்துவதாகவும், தவறும் பட்சத்தில் நகராட்சியால் அபாயகரமான கட்டுமானங்கள் அப்புறப்படுத்தப்பட்டு அதற்கான செலவினம் தங்களிடம் வசூலிக்கப்படுவதோடு தங்கள் மீது உரிய சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

மேலும் அபாயகரமான கட்டிடத்தால் உயிர் சேதமோ,பொருட் சேதமோ ஏற்பட்டால் அதற்கு தாங்களே முழு பொறுப்பாவீர்கள் என்றும் நோட்டீஸில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை இந்த சம்பவம் 10 மணிக்கு முன்னதாக நடைபெற்றதால் இந்த உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.