தஞ்சாவூர் மாவட்டத்தில் 1104 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 497 பேர் வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் இறந்துள்ளார். இது வரை 85970 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இரண்டாவது அலை பரவலாக பரவியதையடுத்து, தற்போது மூன்றாவது அலை பரவும் அபாயம் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் பல்வேறு இடையூர்களுக்கு ஆளாகினர். கொரோனா தொற்று நோயை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் அரசு எடுத்து வருகிறது. மக்களை காப்பாற்றும் விதமாக தடுப்பு ஊசிகள் செலுத்துவதற்கு முகாம் அமைத்து, வலியுறுத்தப்படுகிறது.
இதனால் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், நேற்று தஞ்சை மாவட்டத்தில் ஆயிரத்தை தாண்டியத. ஆனால் தமிழ்நாட்டிலுள்ள அந்தந்த மாவட்ட நிர்வாகம், கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. 25ஆம் தேதி வரை 1104 பேர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 497 பேர் வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் இறந்துள்ளார். இது வரை 85970 பேர் பாதிக்கப்பட்டு, 78772 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இது வரை 1019 பேர் இறந்துள்ளனர். மருத்துவமனைகளிலும், தனிமையிலும் 6179 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும்,வாகனஒட்டிகள், பாதசாரிகள், வணிக நிறுவனங்களில் உள்ளவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்துள்ளார்கள் என ஆய்வு செய்து, அபராதம் விதித்து, எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. தினந்தோறும் சுகாதாரத்துறையினர், தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட அனைத்து தாலுக்காவிலும், காலை முதல் இரவு வரை கொரோனா தொற்று தடுப்பு குறித்தும், விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவருக்கு சில நாள்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, இவருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், கொரோனா தொற்று இருப்பது பிற்பகல் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருந்து, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ள வேண்டும். கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். பொது மக்கள், கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். ஒதவறும்பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பணிபுரிபவர்கள், உரிமையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.