திருவையாறு ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து  விட்டு கூறுகையில், திருவையாறு ஊராட்சி ஒன்றியம், கண்டியூர் ஊராட்சியில் 10.19 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வசதிகளுடன் குழந்தைகளை கவரும் வகையில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையம் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மருவூர் கிராமம் ஆதிதிராவிடர் வடக்கு தெருவில் 130 மீட்டர் நீளத்தில் 2.37 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தார் சாலைகள் அமைக்கும் பணியினை பார்வையிட்டார்.




கல்யாணபுரம் கிராமத்தில் நடுக்கடை காளியாத்தாள் மண்டபம் முதல் கீழக்கரைசாலை மேடை வரை 2.2 கி.மீ நீளத்தில் 35.55 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தார் சாலைகள் அமைக்கும் பணியினையும் பார்வையிட்டார். அப்போது சாலைகளின் அகலம் சரியாக உள்ளதா, ஜல்லிகள் தரமானதாக போடப்படுகிறதா, குறிப்பிட்ட உயரம் சாலைகள் உள்ளதா எனவும், திட்டமிட்டபடி நடைபெறுகிறதா என அளவு கோல் பிடித்து, துல்லியமாக ஆய்வு செய்தார்.  இதனால் அலுவலர்கள் திகைத்து விட்டனர்.




மேலும், கண்டியூர் கிராமம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு நியாய விலை அங்காடியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்தும், சரியான எடையில் விநியோகிக்கப்படுகிறதா என்பது குறித்தும், இருப்பு பதிவேடு மற்றும் பல்வேறு பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருவது குறித்தும் ஆய்வு செய்தார். தொடர்ந்து அலுவலர்களிடம் நியாய விலை கடைகளில் தரமான பொருட்களை விற்பனை செய்ய வேண்டும், கார்டுகளுக்குரிய பொருட்களை கண்டிப்பாக வழங்க வேண்டும், இருப்பு உள்ளது, விற்பனை செய்யப்பட்டது, கொள் முதல் செய்யப்பட்ட கணக்குகள் சரியாக இருக்க வேண்டும். பொது மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வைத்திருக்க வேண்டும்.  




கடைக்கு வரும் பொது மக்களை கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வந்து பொருட்களை வாங்க அனுமதிக்க வேண்டும். குறிப்பிட்ட அளவில் சமூக இடைவெளியுடன் நிற்க வைக்க வேண்டும். காய்ச்சல் போன்ற உடல் உபாதைகளுடன் வந்தால், அவர்களை மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும், நியாய விலை கடையில் இருக்கும் அலுவலர்களும், உதவியாளர்களும் மாஸ்க் அணிந்தும், கிருமி நாசினி தெளித்து கொண்டு பொருட்களை வழங்க வேண்டும் என்றார் .இந்த ஆய்வின் போது திருவையாறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தினி, ஜான் கென்னடி, திருவையாறு வட்டாட்சியர் நெடுஞ்செழியன்,மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


பட்ஜெட் 2022-23 | தூத்துக்குடி - மதுரை ரயில் பாதை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்க கோரிக்கை