தெலுங்கானா மாநிலம், கடப்பா மாவட்டம் மற்றும் தாலுகா, எர குண்டா பகுதியை சேர்ந்த வெங்கடலெட்சுமி அம்மாள் (41) இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில் நிலையத்தில் தலையில் அடிபட்டு சுயநினைவு இல்லாமல் கிடந்தார். இவரை போலீசார் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று இவருக்கு தான் எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. அதனால் அவரை தஞ்சை மருத்துவ கல்லூரி ரோடு மாதா கோவில் அருகில் உள்ள அதுலம் முதியோர் இல்லத்திற்கு அனுப்பி

  வைத்தனர். பின்னர் இவரைப் பற்றிய தகவல்கள் சமூக நலத்துறை மூலம் இயக்கப்படும் முதியோர் உதவி எண் 14567-க்கு தஞ்சை பொறுப்பு அலுவலர் வைஷாலி  அனுப்பி வைத்தார். இந்த எண் இந்தியா முழுவதும் உள்ளது. அதைப்பார்த்த வெங்கடலெட்சுமி மகன் சிவசங்கர் தனது தாயாரை அழைத்து சென்றார்.




சமூக நலத்துறை மூலம் முதியோர் உதவி எண் 14567 என்பது  காணாமல் போன முதியோர் பற்றி தகவல் சேகரித்து சம்பந்தப்பட்ட வர்களிடம் தெரிவிப்பது, முதியோருக்க்கு சட்டரீதியாக ஆலோசனை மற்றும் மனநல ஆலோசனை வழங்குதல், மறதி காரணமாக பிரிந்து சென்ற முதியோர்களை குடும்பத்தினரோடு சேர்த்து வைத்து பாதுகாப்பு வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது போன்ற பல்வேறு உதவி செய்து வருவதாகவும் இதுவரை மாநில அளவில் 128 முதியோரை கண்டறிந்து 28 முதியோரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்து இருப்பதாக மாநில தலைவர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.




இது குறித்து சிவசங்கர் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக தனது தாயாரை தேடிக் கொண்டிருக்கிறேன். 2 நாட்களுக்கு முன்பு தான் தகவல் கிடைத்தது. எனது தாயாரை நன்கு பாதுகாத்து பராமரிப்பு செய்த தஞ்சை அதுவும்  முதியோர் இல்ல நிர்வாகிகள் டாக்டர் ஜோசப் விக்டர் அவரது மனைவி டாக்டர் கிறிஸ்டியானா ஆகியோருக்கும் எங்களுக்கு தகவல் அளித்த தேசியக் குழு மாநில தலைவர் உமாமகேஸ்வரி மற்றும் தஞ்சை பொறுப்பாளர் வைஷாலிக்கும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தனது தாயை பார்த்ததும் கண்ணீர் விட்டு, கட்டி அரவணைத்தார், பின்னர் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். தஞ்சைக்கு எப்படி வந்தார், எதில் வந்தார் என்பது தெரிய வில்லை. உதவி எண் மூலம் தகவல் கிடைத்தால், எனது தாயை கண்டு பிடித்தேன். இதே போல் பலரும் மனநிலை சரியில்லாமல், பல்வேறு பகுதிகளில் உள்ளனர். அவர்களையும் மீட்டு, உதவி எண் மூலம் பதிவு செய்தால், அவர்களது உறவினர்கள், கண்டு கொண்டு அழைத்து செல்ல வசதியாக இருக்கும் என்றார்.