தஞ்சாவூரில் காவிரி டெல்டா பகுதியில் குறுவை பயிர்கள் சூள்கட்டும் தருணத்தில் இருந்து அறுவடை வரை உள்ளது. எலிகள் தானியங்களை உண்பதை விட சேதம் ஏற்படுத்துவது அதிகம். எனவே விவசாயிகள் ஒருங்கிணைந்த எலி கட்டுப்பாட்டு முறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என தஞ்சை வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் தெரிவித்துள்ளார். எலிகள் மிகவும் நுட்பமான அறிவும், தந்திரமும் கொண்ட உயிரினம் ஆகும். சுமார் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பாகவே பூமியில் தோன்றியது எனவும், இதுவரை 2000 இடங்கள் கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் இந்தியாவில் 104 வகை எலிகள் காணப்படுகிறது. எலிகளின் வாழ்க்கை: எலிகள் 2 முதல் 3 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியது. ஒரு ஆண்டில் அஞ்சு முதல் ஆறு முறை குட்டிகள் போடும். எலி குட்டி பிறந்த இரண்டு மாதங்களில் இனப்பெருக்கம் செய்ய தயாராகி விடும். ஒரு ஜோடி எலி மூலம் ஒரு ஆண்டில் 2046 எலிகளாக பெருக்கம் அடைகிறது. எலிகளின் அதிசய குணங்கள்: ஒரு எலி ஒரு நாளில் சராசரியாக 50 கிராம் உணவும், 90 மில்லி லிட்டர் தண்ணீரும் குடிக்கும். நீரில்லாமல் ரெண்டு நாட்களும், உணவில்லாமல் ஏழு நாட்களும் வாழும். தற்காப்புக்காக தண்ணீரில் நீந்துவதும் மரம் ஏறும் திறனும் உள்ளது வயல் எலிகள் தொடர்ச்சியாக ஒரு கிலோ மீட்டர் வரை தண்ணீரில் நீந்தும். வயல்களில் தோண்டும் வளைகளில் 5 கிலோ வரை நெல்மணிகளையும், 2 கிலோ வரை பயறு வகைகளையும் சேமிக்கும். தமிழகத்தில் உணவு பயிர்களான நெல் கரும்பு பயறு உளுந்து பருத்தி சோயா மற்றும் நிலக்கடலை பெயர்களை அழித்து சேதப்படுத்தும். கரம்பெலி, புல்எலி, வயல் எலி, பெருச்சாளி, வீட்டு சுண்டெலி, வீட்டு எலி என எலி வகைகள் உள்ளன.
தஞ்சாவூர்: தானியங்களை வேட்டையாடும் எலி; ஒருங்கிணைந்த கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்!
என்.நாகராஜன் | 23 Sep 2022 12:46 PM (IST)
விவசாயிகள் ஒருங்கிணைந்த எலி கட்டுப்பாட்டு முறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என தஞ்சை வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் தெரிவித்துள்ளார்.
பயிர்களை சேதப்படுத்தும் எலிகள் (மாதிரிப்படம்)
Published at: 23 Sep 2022 12:46 PM (IST)