தஞ்சாவூர்: மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக தஞ்சையில் நாளை செவ்வாய் கிழமை பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Continues below advertisement

இதுகுறித்து தஞ்சாவூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலநேத்திரம் கூறியிருப்பதாவது:

தஞ்சாவூர் நகர துணை மின்நிலையத்தில் நாளை  ( செவ்வாய்க்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஸ்டேடியம் பீடர் பகுதிகளான மேம்பாலம், சிவாஜி நகர், சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன் ரோடு, தென்றல் நகர், கிரி ரோடு, காமராஜ் ரோடு, ஆபிரகாம் பண்டிதர் நகர், திருநகர், வெங்கடாஜலபதி நகர், உமா சிவன் நகர், முருகன் நகர், மல்லிகைபுரம் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

Continues below advertisement

மேலும் திலகர்திடல் பீடர் பகுதிகளான மேலவீதி, தெற்கு வீதி, பெரிய கோவில், செக்கடி ரோடு, மேல அலங்கம் ஆகிய இடங்களிலும், வண்டிக்கார தெரு பீடர் பகுதிகளில் ரயிலடி, சாந்தபிள்ளை கேட், மகர்நோன்பு சாவடி, வண்டிக்கார தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி.பி. கோவில், சேவியர் நகர், சோழன் நகர் ஆகிய இடங்களிலும், சர்க்யூட் ஹவுஸ் பீடர் பகுதிகளில் ஜி.ஏ.கெனால் ரோடு, திவான் நகர், சின்னையா பாளையம், மிஷன் சர்ச் ரோடு, ஜோதி நகர், ஆடக்கார தெரு, ராதாகிருஷ்ணன் நகர் ஆகிய இடங்களிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் இருக்காது.  

இதேோல் மார்க்கெட் பீடர் பகுதிகளில் பர்மா பஜார், ஜூபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம். ரகுமான் நகர், அரிசிக்கார தெரு, கொள்ளுப்பேட்டை தெரு, வாடிவாசல் கடை தெரு ஆகிய இடங்களிலும், கீழவாசல் பீடர் பகுதிகளான பழைய மாரியம்மன் கோவில் ரோடு, ராவுத்தா பாளையம், கரம்பை, சாலக்கார தெரு, பழைய பஸ் நிலையம், கொண்டி ராஜபாளையம் ஆகிய இடங்களிலும், வ.உ.சி. பீடர் பகுதிகளான மகளிர் போலீஸ் நிலையம், வ.உ.சி நகர், மைனர் ஜெயில் ஆகிய இடங்களிலும் மின்வினியோகம் இருக்காது. 

பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 9498794987 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.