Thanjavur Power Cut (11-11-2025): தஞ்சாவூர்: மாதாந்திர பணிகளுக்காக தஞ்சை பகுதியில் வரும் 11.11.25 மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை செய்யப்படும் பகுதிகளில் உங்கள் ஏரியா இருக்கான்னு மக்களே செக் செய்து கொள்ளுங்கள். 11ம் தேதி காலை சீக்கிரமே உங்கள் மின் தேவைகளை செய்து முடித்து கொள்ளுங்கள்.
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் 11ம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் எம். விஜய்ஆனந்த் தெரிவித்துள்ளதாவது:
தஞ்சாவூர் நீதிமன்ற சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் வரும் 11ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இங்கிருந்து மின் விநியோகம் பெறும் மேம்பாலம், சிவாஜி நகர், சீனிவாசபுரம், காமராஜ் ரோடு, ஆபிரகாம் பண்டிதர் நகர், மேலவீதி, தெற்கு வீதி, பெரிய கோயில், செக்கடி ரோடு, மேல அலங்கம், ரயிலடி, சாந்த பிள்ளை கேட், மகர்நோன்பு சாவடி, வண்டிக்கார தெரு, தொல்காப்பியர் சதுக்கம், சேவியர் நகர், சோழன் நகர், ஜிஏ கேனல் ரோடு, திவான் நகர், சின்னையா பாளையம்.
மிஷின் சர்ச் ரோடு, ஜோதி நகர், ஆடக்கார தெரு, ராதாகிருஷ்ணன் நகர், பர்மா பஜார், ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், அரிசிக்கார தெரு, கொள்ளுப்பேட்டை தெரு, வாடிவாசல் கடைத்தெரு, பழைய மாரியம்மன் கோயில் ரோடு, கரம்பை, பழைய பேருந்து நிலையம், பழைய நீதிமன்ற சாலை, கொண்டியராஜ பாளையம், மகளிர் காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
எனவே தஞ்சை பகுதி மக்களே உங்கள் ஏரியா இந்த லிஸ்டில் இருந்தால் வரும் 11ம் தேதி காலை உங்கள் மின் தேவைகளை அதாவது குடிநீர் நிரப்புவது, சமையலுக்கு அரைப்பது போன்ற பணிகளை முடித்துக் கொள்ளுங்கள்.