கும்பகோணம்,பாலக்கரையை சேர்ந்தவர் சந்துரு. இவர் தாராசுரம் காய்கறி மார்கெட்டில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மகன் ராம்குமார் (எ) ராம்சி (31). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. ராம்குமார், பாண்டிசேரியிலுள்ள ஆர்ட்ஸ் கல்லுாரியில் படித்து விட்டு, தஞ்சாவூரிலுள்ள தனியார் பள்ளியில் ஒவிய ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்தாண்டு ஏற்பட்ட கொரோனா

  தொற்றால் ஊரடங்கு காரணமாக ‌பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டதால் இவர் தனது வேலையை இழந்தார்.




இந்நிலையில் தான் கற்ற ஓவியக்கலையில் ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும், எதையாவது சாதிக்க வேண்டும்  என்ற உத்வேகத்துடன் விடாமுயற்சியுடன், பல்வேறு போராட்டத்திற்கு பிறகு, பயர் ஆர்ட்ஸ் ஒவியங்களை கண்டுபிடித்து வரைந்து வருகிறார். அதன்படி பிரதமர் நரேந்திர மோடியின் உருவ படத்தை பயர் ஆர்ட்ஸ் ஓவியம் மூலம் தத்ரூபமாக வரைந்துள்ளார். இதேபோல் கிரிக்கெட் வீரர்கள் தோனி, கோலி திரைப்பட நடிகர்கள் விஜய், ரஜினி, தனுஷ் உள்ளிட்டவர்களின் உருவப் படங்களையும்  பயர் ஆர்ட்சாக வரைந்துள்ளார். இதுவரை 12 ஒவியங்களை வரைந்துள்ளார்.




தற்போது அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை ஒரு லட்சம் குச்சிகளால் பயர் ஆர்ட்ஸாக வரைந்து, அதனை முக.ஸ்டாலினிடம் வழங்க உள்ளார். கொரோனா தொற்றால் பாதிப்பால், பலவேறு கஷ்டங்கள் குடும்பம் வறுமை, போதுமான வருமானம் இல்லாத நிலையில், தான் கற்ற கல்வி தன்னை கைவிடாது என்ற பழமொழிக்கேற்ப ஒவியத்தில் புதுமையானதை கண்டு பிடித்துள்ளார் ராம்சி. இதுகுறித்து ராம்குமார்சந்துரு கூறுகையில்,



கொரோனா தொற்று ஊரடங்கால் பல்வேறு கஷ்டங்கள் வந்த போது, நகைகளை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் குடும்பத்தை நடத்தி வந்தேன். அப்போது, ஆன்லைனில் ஒவிய வரைவது குறித்து பாடம் எடுத்தேன். இதில், கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ளவர்களுக்கு கற்றுகொடுத்தேன். ஒவியத்தில் பலர் வித்தியாசமாக வரைந்திருந்தாலும், எனக்கு என்று ஒரு ஸ்டைல் வேண்டும், புதுமையான வகையில் ஒவியம் வரைந்து, அதில் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் எனுக்குள் ஒடியது.




ஆனால் நான் அனைத்து வரை ஒவியங்களையும் வரைந்து விட்டேன், புதுமையாக என்ன செய்ய முடியும் என்று நினைத்து கொண்டிருந்த போது, எனது மகன், அடம் பிடித்து அழுது கொண்டிருந்தான், அப்போது எனது மனைவி, மகனை பார்த்து, அழாமல், அடம் பிடிக்காமல் இருக்க வில்லை என்றால், தீக்குச்சியால் சூடு வைப்பேன் என்று மிரட்டினார். அப்போது எனது மகன் அழுவதை நிறத்தினான். எனது மனைவி, எரிந்த தீக்குச்சியை கீழே போட்டார்.அந்த தீக்குச்சி, ஒவியம் வரையும் பேப்பரில் விழந்து, சிறிது நேரம் எரிந்த அணைந்தது.




 பின்னர், அதனை எடுத்து பார்த்த போது, எனக்கு அது ஒவியமாக தெரிந்தது. ஏன் நாம் தீக்குச்சியின் மருந்தை வைத்த ஒவியம் வரையக்கூடாது என்ற முடிவு எடுத்து, தீக்குச்சியின், மருந்தை வைத்து ஒவியம் வரையத்தொடங்கின. மீதமான குச்சிகளை சேமித்து வைத்து வருகிறேன். அதனையும் வித்தியாசமான வகையில் ஒவியமாக வரைய முடியும் செய்து, அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளேன்.




முதன் முதலில் நட்சத்திரம் வரைந்தேன், அதன் பின் மீன், தேய்பிறையில் முகம் மாதிரிகளை வரைந்தேன். அதில் சக்சஸ் ஆனதால், முதன் முதலாக நடிகர் விஜயை வரைந்தேன். தொடர்ந்து பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ், மறைந்த பாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியன், விநாயகர், இயற்கை, கால்நடைகளை உள்ளிட்ட 12 பயர் ஆர்ட் ஒவியங்களை வரைந்துள்ளேன்.





 இந்த வகை ஓவியங்களை வரைய 4 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஒவியம் வரைவதற்கு செலவாகும். தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு கிரிக்கெட் வீரர் டோனியின் படத்தை தீக்குச்சி மருந்து மூலம் வரைந்த, முகநுாலில் பதிவு செய்தேன். அதனை பார்த்து சுமார் 40 லட்சம் பேர் லைக் கொடுத்திருந்தனர். அந்த படத்தை சிஎஸ்கே குழுவில், நான் வரைந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்கள். அடுத்ததாக விராட்கோலியின் படத்தை வரைய சொல்லியுள்ளார்கள்.அதற்கான பணியில் இறங்கியுள்ளேன்.


ஒவியம் என்பது சிறிய வயதிலிருந்தே இருக்கும். தொடர்ந்து செயல்படாததால், ஒவியம் வரைவது விட்டு விடும். அக்காலத்தில் வரலாற்றை ஒவியமாக தான் வரைந்து வரும் சந்ததியினருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்கள். ஒவியம் என்பதை, முதன் மொழியாக தான் பார்க்கின்றேன். இந்தியாவில் ஒவியர்கள் என்பது மிகவும் குறைந்து விட்டார்கள்.


தமிழ்நாட்டில் உள்ள வளரும் ஒவியர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். உலகத்தில் யாரும் செய்யாததை செய்ய வேண்டும் என்ற உத்வேகம் வந்ததால் தான் பயர் ஆர்ட் கண்டுபிடித்துள்ளேன். வளரும் இளைஞர்கள், ஆர்வமுடன் கற்றுக்கொள்ள வந்தால், தாராளமாக கற்று கொடுக்க முடிவு செய்துள்ளேன்.




எனது வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கியுள்ளது. ஒவியம் வரைந்து பெயர் பெற்றாலும், குடும்பம் நடத்தவதற்கு வருமானம் அவசியமாகும். தற்போது வரும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தவதற்கே சிரமாக இருந்து வருகிறது. எனவே, தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் உருவ படத்தை பயர் ஆர்ட் மூலம், 1 லட்சம் தீக்குச்சியின் மருந்தை வைத்து வரைந்துள்ளேன். அதனை அவரிடம் சமர்ப்பித்து, தன்னுடைய ஒவிய தொழிலுக்கும், வாழ்வாதாரத்திற்கும் பணி வழங்க வேண்டும் என கேட்க உள்ளேன் என்றார்.