தஞ்சாவூர்: பாஜகவிற்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும். பீகாரில் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வாக்குரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தில் வாக்குரிமை காப்பு இயக்கத்தினர் தஞ்சையில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Continues below advertisement

பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  வாக்குரிமை காப்பு இயக்கத்தின் சார்பில் தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகில் கண்டன தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வாக்குரிமை காப்பு இயக்கத்தின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் கோ.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தினை மக்கள் அதிகாரம் மூத்த தலைவர் காளியப்பன் துவக்கி வைத்து பேசினார்.

கோரிக்கைகளை விளக்கி உலகத்தமிழர் பேரமைப்பு துணைத்தலைவர் அய்யனாபுரம்  சி.முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோ.சக்திவேல், விடுதலை சிறுத்தை கட்சி மைய மாவட்ட செயலாளர் கோ.ஜெய்சங்கர், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநிலத் துணைத் தலைவர் இரா.அருணாச்சலம், சிபிஎம் மாநகர செயலாளர் எம்.வடிவேலன், சமவெளி விவசாய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சு.பழனிராஜன், இந்திய தேசிய காங்கிரஸ் நிர்வாகி வழக்கறிஞர் கோ.அன்பரசன்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.ஜெய்னுல் ஆப்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் ஐ.எம்.பாதுஷா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

Continues below advertisement

தமிழ்நாடு மக்கள் சிறுபான்மை நல குழு மாநில பொதுச் செயலாளர் பி. செந்தில்குமார், ஆதித்தமிழர் பேரவை மூத்த தலைவர் எம்.பி. நாசிகன், திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் எல்.வி. ரெங்கராஜ், விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாநகர செயலாளர் ஐ.தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தங்க.குமரவேல், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் அழகு.தியாகராஜன்,  மகஇக இணைபொதுச் செயலாளர் ராவணன், எச்எம்எஸ் மாவட்ட செயலாளர் எஸ்.சின்னப்பன்,  ஏ ஐ சி சி டி யூ மாவட்ட செயலாளர் கே.ராஜன், ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் என். மோகன்ராஜ், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட பொருளாளர் ஆர்.லட்சுமணன், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் நா.சாமிநாதன், மார்க்சிய பெரியாரிய அம்பேத்கர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கே.மூர்த்தி, புரட்சிகர இளைஞர் முன்னணி சுப்பிரமணியன்,தமிழர் தேசிய முன்னணி நிர்வாகிகள் சதா.முத்துகிருஷ்ணன், எம்.முருகையன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் அ.யோகராஜ் மற்றும் சமூக ஆர்வலர்கள் அபுசாலிக்,தாமஸ்,   தமிழ் முதல்வன், மாரிமுத்து, பக்ருதீன், ஜெஸ்டின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பாஜகவின் கூட்டாளியாக செயல்படும் தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும், உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் நேர்மையான புதிய தேர்தல் ஆணையம் அமைக்க வேண்டும், வாக்குகளை திருடி முறைகேடாக அதிகாரத்தில் இருக்கும் பாஜக மோடி அரசு பதவி விலக வேண்டும், தேர்தல் ஆணையமே ஜனநாயகத்திற்கு குழி பறிக்கும் பேராபத்திரை தடுக்க வேண்டும், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் பீகாரில் 65 லட்சம் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது ஜனநாயக விரோத செயல், பெண்கள், சிறுபான்மையினர் தலித்,பழங்குடி மக்களின் வாக்குகள் பறிக்கப்படுகின்றன, வாக்குரிமை மட்டுமின்றி குடியுரிமையையும் பறிக்கும் தேர்தல் ஆணையத்தின் செயல்களை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. 

மக்கள் வாக்குரிமை காப்பு இயக்கத்தின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கென்னடி ஆர்ப்பாட்டத்தினை நிறைவு செய்து பேசினார். முடிவில் இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் நன்றி கூறினார்.