தஞ்சாவூர்: ஒரே நேரத்தில் இரண்டு ஆர்ப்பாட்டங்கள் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் முதலில் காங்கிரஸ் வேக, வேகமாக முடிக்க அடுத்ததாக திருக்கோயில்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் தஞ்சாவூரில் நடந்தது. என்னன்னு பார்ப்போங்களா?


தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை கண்டித்து தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வழங்காமல் பாரபட்சம் காட்டுகின்றார்கள் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கொடுத்த நிலையில் அதே நேரத்தில் மற்றொரு ஆர்ப்பாட்டத்திற்கும் அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தது.


காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் பட்ஜெட் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான எவ்வித திட்டமும் அறிவிக்கப்படவில்லை. ரயில்வே துறையில் பல்வேறு திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. அதற்கான அறிவிப்பும் இல்லை. பட்ஜெட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி. வி. ராஜேந்திரன் தலைமை வகித்து பேசினார். இங்குதான் நடந்தது ஒரு டிவிஸ்ட். எல்லாரும் சீக்கிரம் பேசி முடிக்கணும். நமக்கு அடுத்ததாக ஆர்ப்பாட்டம் நடந்த வந்துட்டாங்க என்று அறிவிக்கப்பட்டது. 




இருப்பினும் அடுத்தது பேசிய கட்சி நிர்வாகிகள் நீட்டி முழக்கினர். அதற்குள் திருக்கோயில் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடந்த பகுதியில் அங்கும்  இங்கும் நடக்க ஆரம்பித்தனர். இருப்பினும் காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சை நீட்டி முழக்கி கொண்டே இருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் சென்று நிலைமையை விளக்கினர். பின்னர் இத்துடன் ஆர்ப்பாட்டம் நிறைவடைகிறது என்று அறிவித்தனர். இந்த முன்னாள் தலைவர் நாஞ்சில் வரதராஜன், மாவட்ட துணை தலைவர் லட்சுமி நாராயணன், பொதுக்குழு உறுப்பினர் வயலூர் ராமநாதன், விவசாய அணி தலைவர் ஜேம்ஸ், பொதுச் செயலாளர் செந்தில் சிவகுமார், செயலாளர் வடிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தொடர்ந்து தஞ்சை பெரிய கோயில் வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநகரத் தலைவர் காசிராஜன் முன்னிலை வகித்தார். மத நல்லிணக்க பிரச்சாரக் குழு மாநில செயலாளர் தென்னை விஞ்ஞானி  செல்வம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு தேசிய பொதுச் செயலாளர் சந்திரபோஸ் சிறப்புரையாற்றினார்


டெல்டா மண்டல தலைவர் சுரேஷ், தமிழ்நாடு புதுச்சேரி மாநில தலைவர் ஆதி.நெடுஞ்செழியன், மாநில துணைத்தலைவர் துரை. கோவிந்தராஜன், மாநில இணைச் செயலாளர் மகேந்திரன் மற்றும் பலர் பேசினர். தஞ்சை பெரிய கோயில் வளாகம் முழுவதும் மற்றும் வெளிப்புறம் என அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும். கோயிலுக்கு எதிர்ப்புறம் வாகனம் நிறுத்துமிடத்திலிருந்து கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக சாலையின் குறுக்கே  நடை மேம்பாலம் அமைக்க வேண்டும், கோயிலை சுற்றி போதிய அளவில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும், கோயிலின் தென்புறம் பந்தல் அமைத்து பக்தர்களை வெயில் பாதிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 


மாவட்ட துணைத்தலைவர் சம்பத், இணைச்செயலாளர் மகேஷ், துணை செயலாளர் சக்திவேல் மணிகண்டன் மாவட்ட மகளிர் அணி பொருளாளர் கண்ணகி, துணைச் செயலாளர்கள் வசந்தா, டெய்சி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ருக்மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.


அடுத்தடுத்து ஒரே நேரத்தில் தலைமை தபால் நிலையம் பகுதியில நடந்த ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. கார் உட்பட பெரிய வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவானது.