தஞ்சாவூர்: கட்டுமானப் பொறியாளர்களுக்கு என்று தனியாக அமைப்பு உருவாக்க வல்லுநர் குழு அமைத்து தர வேண்டும் என தஞ்சாவூர் கட்டட பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Continues below advertisement

தஞ்சாவூர் கட்டட பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் தலைவர் பொறியாளர் ஜான் கென்னடி நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கங்களில் கூட்டமைப்பானது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 97 கட்டடப் பொறியாளர் சங்கங்களை உள்ளடக்கியது. 97 சங்கங்களிலும் சேர்த்து மொத்தம் 25,000 உறுப்பினர்கள் உள்ளனர். அனைவரும் பொறியாளர்கள் மற்றும் சுயதொழில் புரிபவர்கள்.

Continues below advertisement

2021 திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் அறிக்கையின் பக்கம் 65-ல் வரிசை எண் 471-இல் தாங்கள் அறிவித்துள்ளது போல தமிழகத்தில் கட்டடப் பொறியாளர்கள் கவுன்சில் அமைத்து இந்திய அரங்கில் தமிழகத்திற்கு உள்ள தனித்தன்மைக்கு பெருமை சேர்த்திடும் வகையில் நிறைவேற்றித் தர வேண்டும்.

முதன்முதலாக குஜராத் மாநிலம் 2006ம் ஆண்டு அவர்கள் மாநிலத்திற்கு என ஒரு கட்டட பொறியாளர் கவுன்சிலை உருவாக்கி செயல் வடிவம் கொடுத்துள்ளனர். பொறியாளர்களின் பதிவு REGISTERED ENGINEER ஒரு இடத்தில் பதிவு செய்தால் மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் பதிவுகளை ஏற்றுக் கொள்ளுமாறும், மாநிலம் முழுவதும் ஒரே பதிவு நடைமுறையை ஏற்படுத்தித்தர வேண்டும்.

பொறியாளர்களின் பதிவு REGISTERED ENGINEER ஒரு முறை பதிவு செய்தால் ஆயுட்காலம் வரை செல்லத்தக்கதாகவும்,  பதிவினை புதுப்பித்தல் அவசியமில்லை என்ற நடைமுறையை நடைமுறைப்படுத்தி தர வேண்டும். சுயசான்று (SELF-DECLARATION) அடிப்படையில் கட்டட அனுமதி வழங்குவதில், பொறியாளர்கள் வரைப்படம் தயார் செய்யவும், கையெழுத்து செய்யவும். மாற்றாமல் (G.O.No:133, Dt.18.07.2024)-நடைமுறையை தொடர வேண்டும்

பொறியாளர்களுக்கு OTP வரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். மருத்துவர்களுக்கும் (Medical Council), வழக்குரைஞர்(Bar Counc) கவுன்சில் உள்ளது கட்டுமானத் தொழிலை முறைப்படுத்துவதற்காகக் கட்டுமானப் பொறியாளர்களுக்கும் தனியாக அமைப்பு உருவாக்க வல்லுநர் குழு அமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

பேட்டியின் போது தலைவர் சி.சுப்பிரமணியன், செயலாளர் எ. சார்லஸ் பொருளாளர் இறை, கார்குழலி, முன்னாள் தலைவர்கள் அறிவழகன், ராஜேஷ், செய்தி தொடர்பாளர் சிவக்குமார் மற்றும் சங்க பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்