தில்லாலங்கடி வேலை பார்த்த 4 பேர்.. போலி ஆதார் அட்டை தயார் செய்து நிலப்பதிவு - சிக்கியது எப்படி?

போலி ஆதார் அட்டை தயார் செய்து திருச்சி காஜா பேட்டையை சேர்ந்த உஸ்மான் ரஹீம் கான் என்பவர் கடந்த 2-1-2023 அன்று ஆவண பதிவு செய்துள்ளார்.

Continues below advertisement

தஞ்சாவூர்: தில்லாலங்கடி வேலை பார்த்து போலி ஆதார் அட்டை தயார் செய்து ரூ.50 லட்சம் மதிப்பிலான இடத்தை போலி ஆவண பதிவு செய்த சம்பவத்தில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் சார்பதிவாளர் அளித்த புகாரின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மேலவழுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷேக் தாவுது ராவுத்தர். இவர் இறந்து விட்டார். இந்நிலையில் அவருக்கு சொந்தமான பொன்மான்மேய்ந்த நல்லூர் பகுதியில் இருக்கும் சுமார் ரூ.50 மதிப்பிலான நிலம் ஆவணப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை போலி ஆதார் அட்டை தயார் செய்து திருச்சி காஜா பேட்டையை சேர்ந்த உஸ்மான் ரஹீம் கான் என்பவர் கடந்த 2-1-2023 அன்று ஆவண பதிவு செய்துள்ளார் இது தொடர்பாக போலி ஆவணம் கண்டறியப்பட்டு பாபநாசம் சார்பதிவாளர் காவியா கடந்த 27.9.2024 போலீசில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வந்துள்ளது. 

இந்நிலையில் தஞ்சை எஸ்.பி., ராஜாராமன் உத்தரவின் பேரில் பாபநாசம் டிஎஸ்பி முருகவேல் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு ஆகியோர் போலி ஆவணம் தயாரித்தல், ஆள்மாறட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாபநாசம் அருகே பண்டாரவடை பகுதியைச் சேர்ந்த முகம்மது யூசுப்அலி (50),  திருச்சி காஜாபேட்டை பகுதியை சேர்ந்த உஸ்மான் (60),  திருப்பாலத்துறை பகுதியைச் சேர்ந்த அப்துல்காதர் (58), தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் (37) ஆகியோர் நான்கு பேரையும் கைது செய்தனர். பின்னர் 4 பேரையும் போலீசார் பாபநாசம் கோட்டில் ஆஜர் படுத்தினர். வழக்கை நீதிபதி அப்துல் கனி விசாரித்து 4 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Continues below advertisement