'லிப்ட்' கொடுத்து திருமணமான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

பஸ் வராத நிலையில் பைக்கில் சென்று விடலாம் என்று நினைத்து அந்த பெண் பிரவீனின் பைக்கில் ஏறி அமர்ந்தார். பக்கத்து ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரையும் அந்த பெண் நம்பி உள்ளார் என்று கூறப்படுகிறது.

Continues below advertisement

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே பெண்ணுக்கு லிப்ட் கொடுப்பதாக கூறி பைக்கில் அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயலும் போது ஆற்று பாலத்தில் மோதி கை, கால்களில் முறிவு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

பைக்கில் லிப்ட் கொடுத்த இருவர்

தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் பகுதியை சேர்ந்தவர் திருமணமான 43 வயது பெண். கூலித் தொழிலாளி. இவர் தனது மகள் வீட்டிற்கு செல்ல கடந்த 3ம் தேதி இரவு பூதலுார் பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ராயந்தூரை சேர்ந்த பிரவீன் (32), ராஜ்கபூர் (25), இருவரும் தனித்தனி பைக்கில் வந்துள்ளனர்.

இரவு நேரத்தில் தனியாக அந்த பெண் நிற்பதை பார்த்து உங்கள் ஊரில் சென்று விடுகிறோம் பைக்கில் வாருங்கள் என்று கூறி பீரவீன் அழைத்துள்ளார். பஸ் வராத நிலையில் பைக்கில் சென்று விடலாம் என்று நினைத்து அந்த பெண் பிரவீனின் பைக்கில் ஏறி அமர்ந்தார். பக்கத்து ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரையும் அந்த பெண் நம்பி உள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆள் இல்லாத வயல் பகுதியில் இழுத்து சென்றனர்

பின்னால் மற்றொரு பைக்கில் ராஜ்கபூர் வந்துள்ளார். பூதலுார் அருகே பாலாயிகுளம் பகுதியில் ஆள் இல்லாத வயல் பகுதிக்கு சட்டென்று பைக்கை திரும்பி உள்ளார் பிரவீன். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். உடன் பிரவீனும், ராஜ்கபூரும் சேர்ந்து அந்த பெண்ணை தாக்கி இழுத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

தேடி வந்த உறவினர்... தப்பியோடிய இளைஞர்கள்

இந்நிலையில் தன் வீட்டிற்கு வருவதாக கூறிய அம்மா இன்னும் வரவில்லையே என்று அந்த பெண்ணின் மகள் கவலையடைந்து தனது உறவினரை ஒருவரை விட்டு பார்த்து வர சொல்லியுள்ளார். அந்த உறவினரும் அந்த பெண்ணை தேடி வந்துள்ளார். அப்போது வழியில் அந்த பெண் அழுதுக்கொண்டு இருப்பதை பார்த்து அங்கு சென்றுள்ளார். பெண்ணின் உறவினர் வருவதை பார்த்து, பிரவீன், ராஜ்கபூர் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

தொடந்து தனக்கு நடந்த சம்பவம் குறித்து அந்த பெண் பூதலூர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் பூதலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் பூதலூர் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்த்து அந்த இருவரும் ராயந்தூரை சேர்ந்த பிரவீன், ராஜ்கபூர் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரையும் பிடிக்க போலீசார் சென்றபோது பிரவீன், ராஜ்கபூர் இருவரும் பைக்கில் தப்பி செல்ல முயன்ற போது குணமங்கலம் பகுதியில் வாய்க்கால் பாலத்தில் மோதி கீழே விழுந்தனர். இதில் ராஜ்கபூருக்கு கையிலும், பிரவீனுக்கு காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola