ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தைகள் கூறி கும்பகோணத்தை சேர்ந்த அழகு சாதனப்பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரிடம் 20 லட்சம் ஏமாற்றிய இளைஞரை தஞ்சாவூர் மாவட்ட சைப்ர கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கும்பகோணம் ஜான் செல்வராஜ் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (36). இவர் அழகு சாதனப்பொருட்கள் விற்பனை செய்து வருகின்றார். மணிகண்டனுக்கு அவரது சகோதரர் கார்த்திக் மூலம், திருவள்ளூர் மாவட்டம் எண்ணுார் நேரு நகர் 3 வது தெருவை சேர்ந்த முகம்மது இலீயாஸ் (36) என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பழக்கமானார்.
அப்போது தான் ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதாகவும், அதில் முதலீடு செய்தால், அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தைகள் கூறினார். இதனை நம்பிய மணிகண்டன் முதல் கட்டமாக 2.90 லட்சம் ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். மேலும் தனது மற்றும் மனைவி யோகேஸ்வரியின் பான் கார்டு, ஆதார் கார்டு நகல், மாநிதி கையொப்பம், ஸ்கேன் செய்யப்பட்ட காசோலை நகலை நகல் ஆகியவற்றை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட சாண்றிதழிலில் பூர்த்தி செய்து அதில் கையெழுத்திட்டு அனுப்பியுள்ளார். மணிகண்டன் முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு அதற்கு அடுத்த மாதம் 10 சதவீதம் லாபமாக முகம்மது இலீயாஸ் அனுப்பியுள்ளார். இதனால் மணிகண்டனுக்கு, முகம்மது இலீயாஸ் மீது நம்பிக்கை ஏற்பட்டது. இன்னும் அதிகமான தொகை முதலீடு செய்தால், அதிக லாபம் பெறலாம் என ஆசைவார்த்தைகள் நம்பிய மணிகண்டன், தனது நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் இருந்து 20 லட்சத்தை, முகம்மதுஇலீயாஸ், வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.
சில மாதங்கள் மட்டும் லாபத்தொகையை அனுப்பிய முகம்மதுஇலீயாஸ், அதன் பின்னர் தொடர்ந்து இரண்டு மாதங்களாக மணிகண்டனுக்கு, எந்தவொரு பணமும் அனுப்பவில்லை. அதனால் முதலீடு செய்திருந்த நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், தங்களது மூதலீட்டு திருப்பி கேட்டு மணிகண்டனுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் மனமுடைந்த மணிகண்டன், முகம்மதுஇ லீஸாசுக்கு, போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர், 14.5.2020 அன்று முதலீட்டில் ஒரு பகுதியை தருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் முகம்மது இலீயாஸ், கொடுத்த வாக்குறுதியின் படி பணத்தை திருப்பி தரவில்லை. மீண்டும் மணிகண்டன்,முகம்மது இலீயாசுக்கு போனில் தொடர்பு கொண்ட போது, போன் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என தாமதமாக புரிந்து கொண்ட மணிகண்டன், இது குறித்து தஞ்சாவூர் சைப்ர கிரைம் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், கடந்த 10.4.2021 அன்று புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் எஸ்ஐ கார்த்திக் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்ட, தேடி வந்தனர்.
இந்நிலையில், மணிகண்டன், இவரது நண்பர்கள், வாடிக்கையாளர்களிடம் வங்கி மூலம் வசூலித்த பணத்தை, அடுத்ததடுத்து, சென்னையில் உள்ள 5 வங்கிகளில் மாற்றியிருப்பது, போலீசார் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, முகம்மது இலீஸாசை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், முகம்மது இலீயாஸ் மோசடியான பேர் வழி, இவருக்கு கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி சொந்த ஊராகும். இவரது தந்தை முகம்மது உசேன் மீது இது போன்ற மோசடி குற்றச்செயலுக்காக ஏற்கனவே, மகாராஷ்ட்ரா மாநிலம், வத்ராவதி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மணிகண்டன், இவரது நண்பர்கள், வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட 20 லட்சத்தில், ஆண்டார் குப்பம், மணலி புது நகரில் வசித்து வரும் தனது கள்ளகாதலியின் வீட்டை அழகுபடுத்தியுள்ளார் என தெரிவித்தனர்.