Thanjavur Power Cut (05-12-2025):தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் வீரமரசன்பேட்டை துணை மின்நிலையத்தில் வரும் 5ம் தேதி பராமரிப்பு பணிகள் நடப்பதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. எனவே தஞ்சை பகுதி மக்கள் வரும் 5ம் தேதி காலை சீக்கிரமே தங்கள் மின் தேவைகளை விரைவாக செய்து கொள்ளுங்கள். 

Continues below advertisement

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் வீரமரசன்பேட்டை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கூ.பாலகுமார் தெரிவித்துள்ளதாவது:

Continues below advertisement

வீரமரசன்பேட்டை துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் வரும் 5-ம் தேதி நடைபெற இருப்பதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பூதலூர், செல்லப்பன்பேட்டை, ஆவாரம்பட்டி, மருதக்குடி, புதுப்பட்டி, முத்துவீரகண்டியம்பட்டி, வெண்டையம்பட்டி, நந்தவனம்பட்டி, அய்யனாபுரம், இந்தளூர்.

சோளகம்பட்டி, ஒரத்தூர், பூதராயநல்லூர், சாமிநாதபுரம், சிவசாமிபுரம், மோசஸ்புரம், விண்ணமங்கலம், அடஞ்சூர், மாதுதூரான்புதுக்கோட்டை, முல்லைக்குடி, தீட்சசமுத்திரம், தொண்டராயன்பாடி, ஆற்காடு, சித்திரக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.