தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருமான பிரியங்கா பங்கஜம் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.


தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலானது அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரக வளாக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட்டது. அக்டோபர் 2024 வரை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டு, உரிய திருத்தங்கள் மற்றும் நீக்கம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 9,97,868 ஆண் வாக்காளர்களும், 10,53,024 பெண் வாக்காளர்களும், 177 மூன்றாம் பாலினத்தவர்கள் உட்பட மொத்த வாக்காளர்கள் 20,51,069 உள்ளனர்.


தஞ்சாவூர் மாவட்டத்தில்  திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் 1,30,491 ஆண் வாக்காளர்களும், 1.33.807 பெண் வாக்காளர்கள் மற்றும் 11 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,64,309 வாக்காளர்கள் உள்ளனர்.  கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் 1,30,907 ஆண் வாக்காளர்களும், 1,38,173 வாக்காளர்கள் மற்றும் 16 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,69,096 வாக்காளர்கள் உள்ளனர். பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் 1,28,242 ஆண் வாக்காளர்களும், 1,34,119 பெண் வாக்காளர்கள் மற்றும் 22 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,62,383 வாக்காளர்கள் உள்ளனர். திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் 1,31,516 ஆண் வாக்காளர்களும் 1,37,994 பெண் வாக்காளர்கள் மற்றும் 19 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,69,529 வாக்காளர்கள் உள்ளனர்.


தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் 1,32,452 ஆண் வாக்காளர்களும், 1,44,484 பெண் வாக்காளர்கள் மற்றும் 69 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,77,005 வாக்காளர்கள் உள்ளனர். (6) ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 1,20.233 ஆண் வாக்காளர்களும், 1,27,410 வாக்காளர்கள் மற்றும் 4 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,47,647 வாக்காளர்கள் உள்ளனர். (7) பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 1,17,786 ஆண் வாக்காளர்களும், 1,27,681 வாக்காளர்கள் மற்றும் 25 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,45,492 வாக்காளர்கள் உள்ளனர்.


பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் 1,06,241 ஆண் வாக்காளர்களும், 1,09,356 பெண் வாக்காளர்கள் மற்றும் 11 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,15,608 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 27.03.2024 முதல் 29.10.2024 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களில் தகுதியான நபர்களின் படிவங்கள் ஏற்கப்பட்டு 17,483 நபர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இறந்த, இடம்பெயர்ந்த வாக்காளர்கள் 4,890 நபர்களின் பெயர்களை விசாரணை அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது.


வெளியிடப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலின் நகல், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்காக வருகிற 26.12.2024 வரை வைக்கப்பட்டுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் பிழையின்றி இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். மேலும், எதிர்வரும் 16.11.2024 (சனிக்கிழமை), 17.11.2024 (ஞாயிற்றுக் கிழமை) மற்றும் 23.11.2024 (சனிக்கிழமை), 24.11.2024 (ஞாயிற்றுக் கிழமை) ஆகிய நான்கு நாட்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது மற்றும் திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.


இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.