தஞ்சாவூர்: தஞ்சை அருகே மணக்கரம்பை டாஸ்மாக் எதிரில் நேற்று இரவு இருசக்கர வாகனம் மற்றும் கார் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்தில் தஞ்சாவூரை சேர்ந்த திருநங்கை மற்றும் ஒருவர் பலியானார்.


இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர்


கடலூர் மாவட்டம் ராஜமன்னார்குடி அந்தோணியார் கோயில் தெரு பகுதியை சேர்ந்த திருநங்கை சஹானா (எ) பிரபாகரன் (35). இவர் தற்போது தஞ்சாவூர் மனோஜிப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (38). இவர்கள் இருவரும் திருவையாறில் இருந்து இருசக்கர வாகனத்தில் தஞ்சை நோக்கி வந்து  கொண்டிருந்தனர்.


https://tamil.abplive.com/education/tn-school-reopen-2024-date-official-announcement-tamil-nadu-schools-reopening-on-june-6th-184726


கார் – இருசக்கர வாகனம் மோதல்:


தஞ்சாவூர் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் தனது மனைவியுடன் காரில் திருவையாறு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருவையாறு அருகே மணக்கரம்பை டாஸ்மாக் எதிரில் சஹானா வந்த இரு சக்கரம் வாகனமும் சுந்தரமூர்த்தி ஓட்டிச் சென்ற காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த திருநங்கை சஹானா மற்றும் குமரேசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காரில் வந்த சுந்தரமூர்த்தி மற்றும் அவரது மனைவிக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


போலீசார் விசாரணை:


விபத்து குறித்து அறிந்து நடுக்காவேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.