தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மகாவீர் நகரை சேர்ந்தவர் செந்தில். இவருக்கு யோகேஸ்வரன் (21) லோகேஸ்வரன் (21) ஆகிய மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் இரட்டை குழந்தைகள். யோகேஸ்வரன், அசூர் சாலையிலுள்ள தனியார் கல்லுாரியில் பிகாம் படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், 16 ஆம் தேதி இரவு, யோகேஸ்வரனும், கும்பகோணம், டாக்டர் மூர்த்தி ரோட்டை சேர்ந்த குருபிரசாத் மகன் நத்நகுமார்(21) இருவரும் பைக்கில் வீட்டிலிருந்து வெளியில் வந்தனர். அப்போது சுமார் 200 மீட்டர் துாரம் வந்த போது, 6 பேர் கொண்ட கும்பல் பயங்கரமான ஆயுதங்களை கொண்டு சரமாறியாக வெட்டி, விட்டு தப்பியோடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த இருவரையம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், தொடர்ந்து மேல் சிகிச்சைகாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவக்கல்லுாரியில் அனுமதித்தனர், ஆனால் சிகிச்சை பலனின்றி யோகேஸ்வரன் இறந்தார். ஆபத்தான நிலையிலுள்ள நத்நகுமாரை, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்கு பதிந்து, தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர், இந்த கொலை சம்பவத்தால் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் கூறுகையில்,
யோகேஸ்வரனும், மணீஸ், இருவரும் கல்லுாரியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக படித்து வருகின்றனர். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை தொடர்ந்ததால், அடிக்கடி இருதரப்பினரும் தாக்கி கொள்கிறார்கள். இதனையடுத்து மணீஸ்க்கு ஆதரவாக, கும்பகோணம், அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்த ரமேஷ் என்ற ரவுடி ஆதரவாக சென்று யோகேஸ்வரிடம் தகராறு செய்தார். இந்த பிரச்சனை கடந்த தீபாவளி பண்டிகை அன்றும் தகராறு நடந்துள்ளது.
இந்த பிரச்சனையால் யோகேஸ்வரனை வெட்டி கொலை செய்திருக்கலாம் என்றும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, யோகேஸ்வரனின் பைக் காணாமல் போய் விடுகிறது. அந்த பைக், கும்பகோணத்தை சேர்ந்த சிவகுருநாதன் தெருவில் இருப்பதாக தெரிந்து, போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில், அந்த தெருவை சேர்ந்த சிலரை, போலீசார் அழைத்து சென்று, நன்றாக கவனித்துள்ளனர். பின்னர் இருதரப்பினரும் பேச்சு வார்த்தை நடத்தியதின் பேரில் சமாதானமாக செல்வதாக பேசி முடிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில், கொலையாளிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியில் வந்துள்ளனர். இதனையறிந்த யோகேஸ்வரன், தனது தாய் மற்றும் மாமாவிடம், பிரச்சனை செய்தவர்கள் சிறையிலிருந்து வெளியில் வந்து விட்டார்கள், என்னை ஏதாவது செய்து விடுவார்களோ என்ற அச்சம் உள்ளது என்று கூறியுள்ளார். அதற்கு உறவினர்கள், பிரச்சனையை பேசி முடிக்கப்பட்டு விட்டது. உன்னை ஒன்றும் செய்யமாட்டார்கள், இருந்தாலும் வெளியில் எங்கும் செல்ல வேண்டாம், வீட்டிலேயே இருந்து கொள் என்று கூறியுள்ளார்கள்.
யோகேஸ்வரன் மற்றும் இவரது நண்பர் நந்தகுமார், வீட்டிலிருந்து வெளியில் வருவதை தெரிந்து, 6 பேர் கொண்ட கும்பல், சரமாறியாக வெட்டினர். இதில் யோகேஸ்வரன் இறந்தார். நந்தகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த கொலையில் கூலிப்படையினரின் தொடர்பு உள்ளதா, வேறு பிரச்சனை உள்ளதா என விசாரணை நடந்து வருகின்றது, ரவுடி ரமேஷ் மீது சென்னையில் இரண்டு கொலை வழக்கு உள்ளது என்றனர்.