கும்பகோணத்தை சேர்ந்த இளம் பெண்ணிடம் உல்லாசமாக இருந்து விட்டு ஏமாற்ற முயன்ற போது, பெண்ணின் உறவினர்கள் தர்மஅடி கொடுத்து திடீரென திருமணம் செய்து வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியை சேர்ந்தவர் ஸ்வேதா (22). இவர்தாய் இறந்துவிடார். இவரது தந்தை வேறொரு பெண்ணை திருமணம் செய்து சென்று விட்டதால், தனது அத்தை, மாமா பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார். ஸ்வேதா, மேலக்காவேரியில் உள்ள சாமியான பந்தல் காண்டிராக்டரிடம், வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கும்பகோணம் துக்காம் பாளையம் தெருவை சேர்ந்த தியாகராஜன் (27). இவர், ஸ்வேதா வேலைபார்க்கும் இடத்திற்கு அடிக்கடி சென்று வரவே இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதையடுத்து கடந்த நான்கு வருடமாக அவர்கள் காதலித்து வந்துள்ளனர். இதில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தியாகராஜன் சென்னையில் வேலை கிடைத்துள்ளதாகவும் அங்கு சென்று வேலை நிரந்தரமானவுடன் உன்னை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் அடிக்கடி கும்பகோணத்திற்கு வந்து ஸ்வேதாவிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஸ்வேதாவை சந்திக்க வந்த தியாகராஜனின் செல்போனில் அவர் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த புகைப்படங்களும், ஆபாச வாட்ஸ்அப் எஸ்எம்எஸ்கள் மற்றும் பல பெண்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்து ஸ்வேதா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தியாகராஜனிடம் கேட்டடபோது அவர் பதில் அளிக்காமல் சென்றுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதையடுத்து, ஸ்வேதாவை சந்திப்பதை தியாகராஜன் தவிர்த்து வந்துள்ளார்.
இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஸ்வேதா, தியாகராஜனிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தியாகராஜன், ஸ்வேதாவிடம், உன்னுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்வேதா, வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள் புழுகி கொண்டு, தன் மானம், குடும்பம் மானம் வெளியில் வந்து விடுமோ என்ற பயத்தில், தியாகராஜனிடம் பேசாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் 12 ஆம் தேதி ஸ்வேதா வீட்டிற்கு வந்த தியாகராஜன் வீட்டில் யாரும் இல்லாததால் ஸ்வேதாவை சமாதானம் செய்வது போல் பாசாங்க காட்டி, ஆசை வார்த்தைகள் பேசி, அவரை உல்லாசம் அனுபவிக்க முயன்றுள்ளார். ஆனால் ஸ்வேதா, ஆசைக்கு இணங்காமல், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, தியாகராஜனின் காலில் விழுந்து கெஞ்சி கதறி அழுது புலம்பியுள்ளார். அப்போது திடீரென வீட்டிற்கு வந்த ஸ்வேதாவின் அத்தை, ஸ்வேதா கண்ணீருடன், அழுதி கொண்டிப்பதை பார்த்து, விசாரித்த போது, தியாகராஜன் தன்னை காதலித்து தன் உடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு தற்போது வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை ஏமாற்றிவதாகவும், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால், தனிமையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் மிரட்டுகின்றார் என கூறியுள்ளார்.
இதனையறிந்த தியாகராஜன், தான் சிக்கி கொள்வோமோ என்ற அச்சத்தில், அங்கிருந்து, தப்பி ஓட முயன்ற போது, தியாகராஜனை அக்கம் பக்கத்தினர் திரண்டு, விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் ஸ்வேத்தாவின் உறவினர்கள், தியாகராஜனை இழுத்து சென்று பட்டு வேட்டி சட்டை மாற்றி, கும்பகோணம், நாகேஸ்வரன் கோயில் தெற்கு வீதியுள்ள, முத்துமாரியம்மன் கோவில் ஸ்வேதாவிற்கு மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் நடத்தி வைத்தனர். பின்னர் தியாகராஜனும், ஸ்வேதாவும் திருமணம் முடிந்து மணமக்களாக இருப்பதை பார்த்த, ஸ்வேதாவின் மாமா தன் வீட்டு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து விட்டதாகவும் உன்னை விடமாட்டேன் என தியாகராஜனை தாக்க முயன்றார். அவரை பெண்ணின் உறவினர்கள் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் இருவரையும் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று தியாகராஜன் மீது பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் தியாகராஜன் வேறு எந்த பெண்ணை இதே போல் ஏமாற்றி உள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நாகேஸ்வரன் தெற்கு வீதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. பல பெண்களுடன் உல்லாசமாக இருந்து விட்டு, அவர்களின் அந்தரங்ககளை படங்கள் எடுத்து வைத்து கொண்டு, சமூக வலைதலங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி வருவதால், பல பெண்கள் வேறு வழியில்லாமல் சம்மதிக்கின்றனர். எனவே, இனி வரும் காலங்களில் இது போன்ற காம கொடூரமான செயல்கள் செய்பவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.