தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, ஆலடிக்குமுளை ஊராட்சி,
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகின்றது. மாவட்டத்தில் 128.80 மிமீ அளவில் மழை பெய்துள்ளது. இதே போல் பட்டுக்கோட்டையை அடுத்த ஆலடிக்குமுளை பகுதியில் பலத்த இடியுடன் மழை பெய்தது அப்போது மின்னல் தாக்கியதில் வயலில் நடவு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மங்களம் (45) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மேலும் லதா, புதுமைநாயகி,கண்ணன் ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனே, அருகிலுள்ள அரசு மருத்தவமனைக்கு சிகிச்சைகாக அழைத்து சென்றனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் சூர்யாபுகழேந்தி, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன் ஆகியோர் கொடுத்த தகவல் அளித்தார். இதனையறிந்த பட்டுக்கோட்டை போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர் கூறுகையில், சம்பா-தாளடி நடவுப்பணி இப்பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. நடவு செய்வதற்கு பெரும்பாலும் பெண்கள் வருவார்கள். திடீரென பலத்த மழை பெய்ததால், அதைப்பற்றி கவலைப்படாமல், பிளாஸ்டிக் கேரி பைகளை மாட்டி கொண்டு, தலை நனையாமல், நடவு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பலத்த சத்ததுடன் இடியுடன் மின்னல் தோன்றியது. அப்போது வயலில் நடவுப்பணியில் இருந்த ஒரு பெண், மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் அருகில் நடவு பணியில் ஈடுபட்டிருந் மூன்று பேர் மீது லேசாக தாக்கியதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு, தமிழக அரசு, இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
தஞ்சாவூர்: குடிப்பதற்கு பணம் தராததால் மனைவியை கொன்று கணவன் தற்கொலை