தஞ்சாவூர்: யூடியூப் சேனல் விளம்பரத்தை நம்பி 2.80 லட்சத்தை இழந்த பெண்...!

’’வங்கி கணக்கிற்கு ரூ.10 ஆயிரம் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு மறுநாள் ரூ.23 ஆயிரம் பணம் வந்துள்ளது. இதனால் ஷேர் மார்க்கெட்டில் தனக்கு நல்ல வருமானம் கிடைத்து விடும் என்று ஆக்னெட் நம்பியிருந்துள்ளார்’’

Continues below advertisement

தஞ்சை காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் லியோ எட்மண்ட். கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். எட்மண்டிற்கு போதுமான வருமானம் இல்லாததால், மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனையறிந்த இவரது மனைவி ஆக்னெட் (35), இவர் தானும் ஏதாவது தொழில் செய்து குடும்பத்திற்கு உதவ  வேண்டும் என்று நினைத்துள்ளார். பின்னர்,  இணையதளத்திலுள்ள பதிவுகளில், தொழில் முனைவோருக்கான பகுதிகள்,  ஆலோசனைகள், விளக்கங்கள் இருப்பதையறிந்த அதனை குறிப்பெடுத்து வந்தார். அதன் பின்னர், யூடியூப் சேனலில் வேலைகள் தேடி உள்ளார்.

Continues below advertisement


அப்போது யூடியூப் சேனலில் எஸ்எம் டிரேடிங் என்ற கம்பெனியின் விளம்பரத்தை பார்த்துள்ளார்.  அதில் இருந்த செல்போன் எண்ணில் ஆக்னெட் தொடர்பு கொண்டுள்ளார். அதில் பேசியவர்கள் ஷேர் மார்க்கெட்டில் பணம் முதலீடு செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும், எவ்வளவுக்கு எவ்வளவு பணம் முதலீடு செய்கிறீர்களோ அந்தளவிற்கு பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ஆக்னெட்டை நம்ப வைத்தனர். கணவருக்கு உறுதுணையாக,தானும் ஏதேனும் தொழில் செய்து வருமானத்தை பெருக்க வேண்டும் என்ற நிலையில்,  எஸ்எம் டிரேடிங் நிறுவனத்தார் தெரிவித்த வங்கி கணக்கில் கடந்த 29.7.2020 அன்று ஆக்னெட் ரூ.2.80 லட்சம் பணத்தை அனுப்பி உள்ளார்.



பணம் அனுப்பப்பட்ட அன்றே ஆக்னெட் வங்கி கணக்கிற்கு ரூ.10 ஆயிரம் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு மறுநாள் ரூ.23 ஆயிரம் பணம் வந்துள்ளது. இதனால் ஷேர் மார்க்கெட்டில் தனக்கு நல்ல வருமானம் கிடைத்து விடும் என்று ஆக்னெட் நம்பியிருந்துள்ளார்.  ஆனால் அதற்கு பிறகு எந்த பணமும் வரவில்லை. இதையடுத்து அவர் அந்த செல்போன் எண்ணுக்கு  பல முறை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்றே வந்துள்ளது.

தொடர்ந்து பலமுறை அவர் தொடர்பு கொண்டும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. உறவினர்கள், நண்பர்கள், தனது கணவர் சேமித்த வைத்திருந்த பணத்தை, தொழில் செய்யலாம் என்று நம்ப வைத்து ஏமாற்றியதால், குடும்பத்தின் நிலை மிகவும் மோசமானது. கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்க தொடங்கினர். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஆக்னெட் தஞ்சை சைபர் கிரைம் போலீசில்  புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தீபாவளிக்கு 4 நாட்களே உள்ள நிலையில் வேப்பூரில் நடந்த ஆட்டுச்சந்தையில் 4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Continues below advertisement